
Best Day and Time to Open New Bank Account as Per Astrology : யாராலும் இருந்தாலும் புதிதாக எந்த ஒரு விஷயத்தை செய்ய தொடங்கும் போது நேரம், காலம், நாள், நட்சத்திரம், கிழமை என்று பார்த்து தான் செய்வது வழக்கம். ஏனென்றால் அப்போது தான் எல்லாமே நல்லதாக நடக்கும் என்பது ஐதீகம். திருமணம், கிரஹபிரவேசம், காதணி விழா, நிச்சயதார்த்தம், சாந்தி முகூர்த்தம், தொழில், பிஸினஸ், வியாபாரம் என்று எல்லாவற்றிற்கும் நல்ல நேரம் பார்ப்பது உண்டு.
இவ்வளவு ஏன் வேலையில் சேர்வதற்கு கூட நல்ல கிழமை பார்த்து தான் சேர்வார்கள். அப்படியிருக்கும் போது நாள்தோறும் நாம் பயன்படுத்தும் லட்சுமி தேவி என்று சொல்லக் கூடிய பணத்தை சேமித்து வைக்க வங்கி அக்கவுண்ட் ஓபன் பண்ணுவது மட்டும் நல்ல நாள் இல்லாமலயா? அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க….
நாம் சம்பாதிக்கும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் வகையிலும், வங்கி சேமிப்பு உயரும் வகையில் நல்ல நேரம், கிழமை, நாள், நட்சத்திரம் என்று பார்க்காமல் விட்டால் அது கெடு பலன்களை கொடுக்கும். ஆனால், அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், அதைப் பற்றி நமக்கு தெரியாது. முழுமையாக அதைப் பற்றி தெரிந்து கொண்டால் எந்த வழிகளில் எல்லாம் பணம் நம்மை விட்டு செல்கிறது எதனால் செல்கிறது என்று நமக்கு புரிந்திருக்கும். இதுவரையில் அப்படியில்லை என்றால் இனிமேல் நல்ல நேரம், காலம் பாருங்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம்…புதிதாக வங்கி கணக்கு துவங்க நினைப்பவர்கள் சரியான நேரம், காலம், கிழமை பார்த்து துவங்கினால் சேமிப்பு கோடி கோடியாய் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பணம் என்பது சாதாரண பேப்பர் இல்ல. அது லட்சுமி தேவி. செல்வலட்சுமி, செல்வத்தின் அடையாளம். பணம் சேமிப்பதில் கவனம் செலுத்தினால் வெற்றி உங்களை தேடி வரும். மென்மேலும் காசு, பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
புதிதாக வங்கி கணக்கு துவங்க வேண்டுமென்றால், வார நாட்களில் நல்ல கிழமையை தேர்வு செய்வது அவசியம். குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிமை தான் அதற்குரிய நாள். ஏனென்றால், வியாழக்கிழமை பண வரவுக்கு ஏற்ற நாள். வியாழக்கிழமை மட்டும் போதுமா என்று கேட்டால் இல்லை. கிழமையுடன் நட்சத்திரமும் கூடி வர வேண்டும். அதாவது வியாழக்கிழமை உடன் பூரட்டாதி நட்சத்திரமும் சேர்ந்து வர வேண்டும்.
இந்த இரண்டும் சேர்ந்து வரக் கூடிய நாளில் வங்கி கணக்கு துவங்கினால் பணம் மென்மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஜோதிட ரகசியம். வங்கி அக்கவுண்ட் மட்டுமின்றி பணத்தை சேமிக்க ஆசைப்பட்டால் வீட்டில் புதிதாக மண் உண்டியலில் இந்த வியாழக்கிழமையும், பூரட்டாதி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் சேமிக்க தொடங்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையும் உண்டியலிலோ அல்லது வங்கி கணக்கிலோ பணம் சேமிக்கலாம்.
இப்படி செய்வதன் மூலமாக உங்களுக்கு நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கூட வெற்றி உங்களை தேடி வரும். பணத்தை செலவு செய்வது ஈஸி. ஆனால் சேமிப்பது தான் கஷ்டம். பிறப்பு முதல் இறப்பு வரை பல வழிகளில் பணம் வரும், போகும். ஆனால், யாருக்கும் பணம் நிரந்தரம் இல்லை. பணம் அவசியம் தான். இதற்கிடையில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து தான் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
அப்படிப்பட்ட வாழ்க்கையில் சேமிப்பை கனவில் நினைத்து கூட பார்க்க முடியாது. இது போன்ற பல காரணங்களால் வியாழன் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தை தேர்வு செய்து அந்த நாளில் வங்கி அக்கவுண்டை துவங்கி பணத்தை சேமிக்க தொடங்கலாம். இப்படி ஒரு முறை நீங்கள் செய்தால் பணம் உங்களை விட்டு போகவே போகாது. உங்களையே சுற்றி சுற்றி வரும். பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் நீங்கள் தான் லச்சாதிபதி, கோடீஸ்வரன்.