
Biryani leaf Pariharam in Tamil : யாருக்குத்தான் கடன் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் கடன் இருக்கும். சிலர் கடனுக்கு வட்டி கட்டுவார்கள். இன்னும் சிலர் மாதம் மாதம் ஈஎம்ஐ கட்டுவார்கள். ஹவுசிங் லோன், பைக், கார் லோன், பெர்சனல் லோன் என்று வங்கி மூலமாக கோடி கோடியாய், லட்சம், லட்சமாக கடன் வாங்கி மாதம் மாதம் ஈஎம்ஐ கட்டிக் கொண்டு வருவோம்.
ஆனால், கடன் அடைந்த பாடு தான் இல்லை என்று வருத்தப் படுவோர் ஏராளம். அதற்கு எல்லாம் இன்றைக்கு விடிவு காலம் பிறக்க போகிறது. அதற்கு கடன் உள்ள அனைவரும் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை மறக்காமல் செய்து பாருங்கள்.
ஏனென்றால், இன்று நவம்பர் 11 ரொம்பவே முக்கியமான நாள். 11ஆவது மாதம் 11ஆம் தேதி இணைந்து 1111 என்று வருகிறது. ஆதலால் இது அதிர்ஷ்டமான நாள். பொதுவாக 1 என்பது வெற்றியை குறிக்கக் கூடியது. ஏஞ்சல் நம்பர் என்று சொல்வார்கள். இந்த 4 ஒன்றுகள் சேர்ந்த நாள் என்பதால் இந்த நாள் லக்கியான நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் 2 முறை பரிகாரங்கள் செய்யலாம். அதாவது காலை 11.11 மணி அதே போன்று இரவு 11.11 மணி. இந்த 2 நேரத்தையும் தவறவிடக் கூடாது. இன்று செய்யவில்லை என்றால் 2025 ஆம் ஆண்டு 11ஆவது மாதம் 11ஆம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும். எப்போதும் மனிதர்களுக்கு இருக்க கூடிய முக்கியமான பிரச்சனை கடன் தான். அந்த கடனை அடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க…
பரிகாரம் என்ன என்று கேட்டால் அது பிரியாணி இலையை எரிக்க கூடியது. ஈஸியாக இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆம், அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாமா? பிரியாணி இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஓட்டையோ கிழிந்தோ இருக்க கூடாது. சுத்தமான இலையாக இருக்க வேண்டும். அந்த பிரியாணி இலையில் பச்சை நிற பேனாவில் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றும் அல்லது 1,00,000 கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதலாம். உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை இருக்கிறதோ அதை எழுதி கடன் விரைவில் அடைய வேண்டும் என்று எழுத வேண்டும்.
அப்படி இல்லை என்றால் யாரிடமாவது நீங்கள் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தால் அவரது பெயரை எழுதி எழுதி அவரிடம் வாங்கிய கடன் அடைய வேண்டும் என்று எழுதலாம். இதையெல்லாம் 11 மணி 11 நிமிடங்களுக்குள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று உங்களது முன்பு மண் அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
சரியாக மணி 11.11 ஆன பிறகு அந்த நீங்கள் எழுதி வைத்திருக்கும் பிரியாணி இலையை உங்களது தலையை 11 முறை சுற்றி அந்த விளக்கில் எரித்துவிட வேண்டும். மேலும், அப்படி எரிக்கும் போது மனதிற்குள் கடன் அடைய வேண்டும் என்று 11 முறை சொல்ல வேண்டும். பிரியாணி இலையை எரித்த பிறகு வரும் சாம்பலை கால் மிதி இல்லாத இடங்களில் கொட்டி விட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
உதாரணத்திற்கு வாசலில் கொட்டினால் கொட்டிய இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதற்கு பாத்திரம் கழுவும் சிங்கில் கொட்டிவிட்டு தண்ணீர் ஊற்றலாம். அப்படி இல்லை என்றால் சாம்பலை தண்ணீரில் கரைத்து சிங்கில் ஊற்றி விடலாம். இது உங்களது சாய்ஸ். உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி செய்யுங்கள். இதன் மூலமாக உங்களது கடன் விரைவில் அடைந்துவிடும்.
இந்த பரிகாரத்தை செய்துவிட்டால் மட்டும் போதாது அதற்குரிய வேலைகளையும் நீங்கள் செய்து வந்தால் 11 நாட்களுக்குள்ளாக முடிவு கிடைக்கும். உதாரணத்திற்கு வங்கியில் லோனுக்கு அப்ளை செய்யலாம் அல்லது நண்பர்களிடம் பணம் பெற்று கடன் வாங்கியவர்களிடம் கொடுக்கலாம். இப்படி பல வழிகளில் முயற்சி செய்ய வேண்டும்.