Angarki Chaturthi 2024, 2024 Sankashti Chaturthi Vrat
Angarki Chaturthi 2024 Palan in Tamil: நாளை நவம்பர் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அங்காரக சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது செவ்வாயன்று வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று அழைக்கப்படும். இதற்கு இன்னொரு பெயரும் கூட இருக்கிறது. அதாவது, அங்கார்கி சங்கஷ்டி சதுர்த்தி. பொதுவாக சதுர்த்தி என்றால் விநாயகரையும், சஷ்டி என்றால் முருகப் பெருமானையும் வழிபாடு செய்வோம். ஆனால், இந்த அங்காரக சதுர்த்தி நாளன்று நாம் முருகப் பெருமானையும், விநாயகரையும் சேர்ந்தே வழிபாடு செய்ய வேண்டும். அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம் வாங்க.
Angarki Chaturthi Viratham
மிகவும் எளிமையான கடவுள் யார் என்றால் அது விநாயகப் பெருமான் தான். அருகம் புல் கொண்டு வழிபாடு செய்து வேண்டி வந்தால் வேண்டிய வரம் கிடைக்கும். அப்படிப்பட்ட விநாயகருக்கு ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். இந்த நாளில் நாம் விரதம் இருந்து விநாயகப் பெருமானையும், செவ்வாய்க் கிழமை என்பதால் முருகப் பெருமானையும் வணங்கி வழிபாடு செய்தால் கடன் நீங்குவதோடு, எதிரி தொல்லையும் இருக்காது. தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.
Sankashti Chaturthi, Angarki Sankashti Chaturthi, Angaraka Viratham,
அதுமட்டுமின்றி வீடு கட்டக் கூடிய யோகமும் தேடி வரும் என்பார்கள். பூமி தேவியான பிருத்வியின் மகன் அங்காரகன். தீவிரமான விநாயகர் மற்றும் ரிஷியின் பக்தன். ஒருநாள் கிருஷ்ண சதுர்த்தி நாள் செவ்வாயன்று விநாயகப் பெருமானை வணங்கி அவரிடம் ஆசை பெற்றான். அப்போது விநாயகப் பெருமானோ உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறார். அதற்கு அங்காரகனோ எப்போதும் விநாயகர் என்ற உங்களது பெயருடன் நான் இணைந்திருக்க வேண்டும் என்கிறான் அங்காரகன்.
Angaraga Chaturthi 2024, Angaarakan
அங்காரகனின் ஆசைப்படியே அங்காரிக சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களது வேண்டிய யாவும் கிடைக்கும் என்று அருள் புரிந்தார். அப்போது முதல் கிருஷ்ண சதுர்த்தி அங்காரக சதுர்த்தி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், நவக்கிரகங்களில் ஒருவராகவும் அங்காரகன் இருக்கிறார். பொதுவாக முருகன் கோயில்களில் அங்காரகனுக்கு என்று தனி சன்னதியும் இருக்கும். வடபழநி முருகன் கோயிலில் அங்காரகனுக்கு தனி சன்னதி இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.
Angarki Chaturthi 2024, Angaraka Chaturthi, Angaraka Viratham
ஆனால், எத்தனை பேருக்கு அவர் தீவிரமான விநாயகப் பெருமான் பக்தர் என்று தெரிந்திருக்கும்? நாளை நவம்பர் 5 ஆம் தேதி அங்காரக சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்வோருக்கு வேண்டிய வரம் கிடைக்கும்.
அதுவும் இல்லாமல் இப்போது சஷ்டி விரதம் வேறு கடைபிடிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த அற்புதமான தருணத்தில் நீங்கள் விரதம் இருந்து விநாயகப் பெருமானையும், அவரது தம்பியான முருகப் பெருமானையும் வழிபாடு செய்தால் கடன், நோய், எதிரிகள் தொல்லைகள் நீங்குவதோடு கோடீஸ்வர யோகமும் தேடி வரும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.
Angarki Chaturthi 2024, 2024 Sankashti Chaturthi Vrat,
சங்கடம் என்றால் தொல்லை என்றும், ஹர என்றால் நீங்குதல் என்றும் பொருள்படும். ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தி நாளன்றும் நாம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். இந்த நன்னாளில் நாம் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விநாயகப் பெருமானையும், முருகப் பெருமானையும் வழிபாடு செய்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.
காலை முதல் இரவு வரை உபவாசம் இருந்து இரவு கோயிலுக்கு சென்று விநாயகப் பெருமானையும், முருகப் பெருமானையும் ஒன்றாக வழிபாடு செய்தால், செல்வம், செல்வாக்கு, பேரும், புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். சகல விதமான நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.