அதன் அடிப்படையில் கடந்த 2022 - 23ம் ஆண்டில் 200 நபர்களும், 2023 - 24ம் ஆண்டு 300 நபர்களும் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் நடப்பு நிதியாண்டான 2024 - 25ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 21 நபர்கள் வீதம் 420 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.