Tirupati Temple: இனி இந்துக்களுக்கு மட்டுமே வேலை! அதிர்ச்சியில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள்!

First Published Nov 2, 2024, 4:32 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புதிய அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு பணிக்கு மாற்றுவது அல்லது கட்டாய ஓய்வு கொடுப்பது குறித்து அரசுடன் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளயில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக இந்தியாவிலேயே திருப்பதி கோவிலில்தான் அதிக அளவு காணிக்கை செலுத்தப்படுகிறது. அதுவே ஆந்திர அரசுக்கு முக்கிய நிதியாக பார்க்கப்படுகிறது. இக்கோவிலில் அவ்வப்போது சர்ச்சை செய்திகளும் வெளியாகி வருகிறது. 

அண்மையில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 

Latest Videos


இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். இந்த குழுவில் உறுப்பினர்களாக 24 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

அறங்காவலர் குழு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: என்னை அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. கடந்த ஆட்சி காலத்தை போல் அல்லாமல் வெளிப்படை தன்மையாகவும் உண்மையாகவும் பாடுபடுவேன். திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும். 

மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். இருப்பினும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சியில் திருமலையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. கோவிலின் புனிதத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றார். 

click me!