சர்ப்ப தோஷம் என்றால் என்ன? யாருக்கு சர்ப்ப தோஷ பாதிப்பு ஏற்படும்?

First Published Nov 1, 2024, 7:04 PM IST

Kala Sarpa Dosham: பாம்புக்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பு மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பாம்பு தெய்வமாக வணங்கப்படுகிறது, மேலும் பாம்பைக் கொல்வது சாபமாக மாறும் என்று நம்பப்படுகிறது. சர்ப்ப தோஷம் பணக் கஷ்டங்கள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Kala Sarpa Dosham, Astrology

Kala Sarpa Dosham: பாம்புக்கும் மனுஷனுக்கும் பிரிக்க முடியாத உறவு. இது இன்னைக்கு நேத்திக்கான விஷயமில்ல. மனித குலம் தோன்றிய காலத்துல இருந்தே பாம்புக்கும் மனுஷனுக்கும் தொடர்பு இருக்கு. இதுனாலதான் நாகலோகம், நாககன்னி மாதிரியான கதைகள் உருவானது. மனுஷங்க பாம்பா மாறுறது, பாம்பு மனுஷனா மாறுறது... இப்படி கதைகள்லாம் மனுஷனுக்கும் பாம்புக்கும் இருக்கற உறவுக்கு சாட்சி. அதுலயும் இந்து மதத்துல பாம்ப கொல்லுறது, அடிச்சு கொல்லுறது இல்லனா வேற எந்த வகையிலயும் வன்முறை பண்ணுறது பாவம்னு கருதப்படுது.

Kala Sarpa Dosham Pariharam

பாம்ப தெய்வமா வணங்குற ஒரு பெரிய கூட்டமே இருக்கு. தெரிஞ்சோ தெரியாமலோ பாம்ப கொன்னா அது சாபமா மாறும்னு தலைமுறை தலைமுறையா சொல்லிட்டு வர்றாங்க. பண கஷ்டம், குடும்பத்துல பிரச்சனை, கல்யாணம் நின்னு போறது, கல்யாணமே ஆகாம இருக்குறது, வேலைல பின்னடைவு, எல்லா இடத்துலயும் ஏமாற்றம், சொந்தக்காரங்ககிட்டயே துரோகம், குழந்தை இல்லாத நிலைமை, குழந்தை பிறந்தாலும் அவங்களுக்கு பிரச்சனை... இப்படி நிறைய பிரச்சனைகள் சர்ப்ப தோஷத்தால வரும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

Latest Videos


Horoscope, Zodiac Signs, Kala Sarpa Dosham

அப்ப சர்ப்ப தோஷம்னா என்ன? யாருக்கு வரும், ஏன் வரும்னு என்பது பற்றி நாம் பார்க்கலாம். நாகத்துக்கு மனுஷ ஜென்மத்துல ரொம்ப முக்கியத்துவம் இருக்கு. பாம்புகள் அதுலயும் நிறைய வகை நாகப்பாம்புகள் யார தொந்தரவும் பண்ணாது. அதுங்க பாட்டுக்கு அதுங்க இருக்கும். ஆனா எங்கயாவது ஒரு மூலையில இருக்குற பாம்ப கம்பால குத்துறது, இல்லனா கல்லு எறிஞ்சு வன்முறை பண்ணுறது, நாகப்பாம்பு கண்டா அடிச்சு கொல்லுறது. அங்கதான் ஆரம்பிக்குது மனுஷனுக்கு கஷ்ட காலம். 

Kala Sarpa Dosham Pariharam, Astrology, Jothidam

பாம்பு செத்து போற சமயத்துல சபிக்கும். அதுங்க சபிக்குறப்ப எத்தன பேர் சுத்தி நிக்குறாங்களோ எல்லாருக்கும் சர்ப்ப தோஷம் வரும். பாம்புகள் செத்து போறப்ப நீளமா மூச்சு விடும். அவங்க மூச்சு காத்துல கலையும். அந்த காத்த யார் சுவாசிக்குறாங்களோ அவங்களுக்கெல்லாம் சர்ப்ப தோஷம் வரும். அவங்க வம்சாவளிக்கும் இது தொடரும். கொல்லுறப்ப சுத்தி நிந்து அத தடுக்காம இருந்தவங்களுக்கும் சர்ப்ப தோஷம் வரும். பல நேரங்களில் ஒரு வம்சமே சர்ப்ப தோஷத்தால அழிஞ்சு போன வரலாறும் உண்டு.

Kala Sarpa Dosham Pariharm,

ஜாதகம் பார்த்தா சர்ப்ப தோஷம் எப்படி அவங்க குடும்பத்துக்கு வந்துச்சுன்னு தெரியும். அதுல நிறைய பேரோட பின்னணி பார்த்தா நாகப்பாம்ப கொன்ன நாள்ல இருந்தே இந்த தோஷம் ஒட்டிக்குது. அதனால யாரும் பாம்புக்கு தொந்தரவு பண்ணாதீங்க. ஒரு வேளை பாம்பு கண்டா பாம்பு பிடிக்குறவங்கள கூப்பிட்டு பிடிச்சு விடுங்க, இல்லனா அது பாட்டுக்கு வேற இடத்துக்கு போக விடுங்க. இல்லனா அதுக்கு என்ன ஆகுதோ தெரியாது, ஆனா கொன்னவங்க மட்டும் கஷ்டப்படுறது நிச்சயம். சர்ப்ப தோஷத்துக்கு பரிகாரங்கள் இருந்தாலும் சில சமயங்கள்ல பரிகாரம் பண்ணாலும் சீக்கிரமா முழுசா சரியாகாது.

Kala Sarpa Dosham, Horoscope

அதே சமயம், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச சமயத்துல ஜாதகம் பார்த்தா, இந்தியாவுக்கு காலசர்ப்ப தோஷம் இருந்துச்சு. அதனால இந்த பூமியில பிறந்த எல்லாருக்கும் சர்ப்ப தோஷம் கொஞ்சமாவது இருக்கும். அப்படிப்பட்டவங்க ஒரு தடவ சர்ப்ப தோஷ நிவர்த்தி பண்ணிக்கிட்டா நிறைய பிரச்சனைகள்ல இருந்து தப்பிக்கலாம்னு சொல்லப்படுகிறது.

click me!