Diwali 2024 : கோடீஸ்வரர்கள் கூட தீபாவளி பண்டிகை நாளில் வீட்டிற்கு சில பொருள்களை கொண்டு வருகிறார்கள். அந்த பொருள்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிலைக்க செய்யும். செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும்.
இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகையில் ஒன்று தீபாவளி. வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்தியா முழுக்க தற்போது தீபாவளி கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊர் திரும்பி கொண்டிருக்கிறார்கள்.
தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளான தந்தேராஸ் அட்சய திருதியை போல விசேஷமானது. இந்த நாளில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டமானதாக சொல்லப்படுகிறது. வணிகர்கள் மட்டுமின்றி செல்வத்தை விரும்புபவர்களுக்கும் இந்த நாள் நன்மை தரும் நாளாகும். இந்த நாளில் சில பொருள்களை வாங்கினால் வீட்டிற்கு மகிழ்ச்சியும் செல்வமும் மிகுதியாய் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
25
Things To Buy Before Diwali 2024
ஏன் விசேஷமானது?
செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்க தந்தேராஸில் பொருள்களை வாங்கவேண்டும். இது ஒருவருன் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் பல மடங்கு அதிகரிக்குமாம். கோடீஸ்வரர்கள் கூட தங்களுடைய வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் அடைய அன்றைய நாளில் சிறப்பு கொள்முதல் செய்வார்கள். 2024ஆம் ஆண்டு தந்தேராஸ் நாள் அக்டோபர் 29ஆம் தேதி காலை 10:31 மணிக்கு தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி மதியம் 1:15 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வாங்க வேண்டிய பொருள்கள் குறித்து காணலாம்.
35
Things To Buy Before Diwali 2024
மகா லட்சுமி - விநாயகர் சிலை:
தந்தேராஸில் மகாலட்சுமி, விநாயகர் சிலைகளை வாங்குவது சிறந்தது. இதன் மூலமாக செல்வ செழிப்பு பெருகும். இவை செழிப்பின் சின்னமாக உள்ளன. ஆகவே, அந்த நாளில் இந்த சிலைகளை வாங்கினால் மங்களகரமானதாக கருதப்படும்.
நல்ல முதலீடாக கருதப்படும் தங்கம், வெள்ளி மற்றும் நாணயங்களை அன்றைய தினம் வாங்கலாம். இவை நம் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்கும். வணிகத்தில் உள்ளவர்கள் நகைகள், பாத்திரங்கள், பணப்பெட்டிகள் அல்லது பெட்டகங்கள் ஆகிய பொருள்களை வாங்கினால் லாபத்தை இரட்டிப்பாக்கும். புத்தாண்டில் புதிய வாய்ப்புகளுக்கள் உங்கள் கதவை தட்டும்.
தந்தேராஸ் தினத்தில் வாங்கும் பொருட்கள் உண்மையில் செல்வத்தை ஈர்க்கும் சிறப்பு சக்தி கொண்டுள்ளவை என நம்பப்படுகிறது. வடமாநிலங்களில் ஒவ்வொரு தீபாவளியின் போதும் இந்த முறையினை பின்பற்றுவார்கள். இது வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலை பெருக்கும். மகா லட்சுமியின் கோபத்தைத் தணிக்க, சில பொருட்களை வாங்கலாம். அப்படி வாங்கினால் செல்வத்தின் கடவுளான குபேரனைப் போல செல்வத்தை குவிக்க உதவும் என்பது ஐதீகம்.