
வாஸ்துபடி வீட்டில் சில விஷயங்களை செய்வது நல்ல முன்னேற்றத்திற்கு உதவும். வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுவது தான் வீடுகளில் நேர்மறை ஆற்றலை வைக்க உதவும். அது போல உங்களுடைய படுக்கையறையில் பீரோ வைக்கவும் வாஸ்துபடி சில வழிகாட்டல்கள் உள்ளன. அப்படி வைத்தால் செல்வ, செழிப்போடு இருக்கலாம். ஆனால் அதை பின்பற்றாவிட்டால் வீட்டில் பணம் தங்காது.
பீரோவை வைக்க வேண்டிய திசை
வாஸ்துபடி, பீரோவை படுக்கையறையில் சில திசைகளில் வைப்பது தான் சிறந்தது. தென்மேற்கு திசையில் பீரோவை வைப்பது நல்ல பலன்களை தரும். இந்த திசையில் பீரோவை வைத்தால் பீரோ கதவினை வடக்கு அல்லது கிழக்கு திசையில் திறக்கலாம். இந்த திசை தான் உங்களுக்கு ல் செல்வத்தையும் செழிப்பையும் அள்ளி அள்ளி தருவதாக நம்பப்படுகிறது.
ஏன் தென்மேற்கு திசை?
தென்மேற்கு மூலையில் வைத்தால் அந்த அறையின் இடத்தை தெளிவுபடுத்தும். வீட்டிலும் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்தும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். வற்றாத செல்வமும் அதிகரிக்கும். படுக்கையறையில் பீரோ வைப்பதன் மூலம் நல்ல வேலைக்கான வாய்ப்பு கூட அமையும். அதுமட்டுமின்றி வீட்டின் தென்மேற்கு திசையில் பீரோ வைப்பதன் காரணமாக, அந்த அறைக்கு நடுநிலையான வண்ணங்கள் பூசுவது நல்லது. பீரோ வெள்ளை, பழுப்பு, கிரீம் ஆகிய வண்ணங்களுடன் இருப்பது சிறந்தது.
ஏன் படுக்கையறையில் பீரோ வைக்கிறார்கள்?
படுக்கையறையில் பீரோ வைப்பது நிதி வளர்ச்சியை தூண்டும். படுக்கையறை தான் வீட்டின் சக்திவாய்ந்த இடமாகும். இது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரம் அறையின் வடக்கு திசையில் பணம், நகைகளை வைக்க சொல்கிறது. ஏனென்றால் செல்வத்தின் கடவுளான குபேரனின் ஆதார திசை கூட வடக்கு தான். ஆகவே செல்வத்தை சேர்த்து வைப்பதற்கு இத்திசையே ஏற்றது.
படுக்கையறை சுவரில் இருந்து இடைவெளிவிட்டு பீரோவை வைக்கலாம். சுவரை ஒட்டி வைத்தால் காற்றின் இயக்கத்திற்கு தடை ஏற்படும். இப்படி வைத்தால் வீட்டில் செல்வம், செழிப்பு இரண்டையும் பெருகும்.
இதையும் படிங்க: பணத்தை ஈர்க்கும் இருக்கும் மயிலிறகு; எந்த திசையில் வைக்கணும் தெரியுமா?!
கண்ணாடிகளுக்கு வாஸ்து:
வீட்டைக் கட்டும் போது, வாஸ்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுவே மன, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாஸ்து படி பீரோவின் திசை தென்மேற்கு என்றால், கண்ணாடிகள் வைக்கவும் தனி திசைகள் உண்டு. படுக்கையறையில் வைக்கும் பொருள்களில் கண்ணாடிகள் இல்லாமல் வாங்குவது நல்லது. உங்களுடைய படுக்கையறையில் கண்ணாடி வைத்த பீரோ வைத்தால் அந்த கண்ணாடி படுக்கைக்கு எதிராக இருக்கக் கூடாது. கண்ணாடி வைத்த பீரோ வாஸ்து படி மங்களகரமானது கிடையாது. இது எதிர்மறை ஆற்றலை பரப்பும். நிதி வளர்ச்சியையும் பாதிப்பதாக நம்பப்படுகிறது. அதனால் கவனமாக வாங்குங்கள்.
இதையும் படிங்க: வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? அப்ப 'இந்த' தப்ப மறந்தும் பண்ணாதீங்க!!
பீரோ வைக்கக் கூடாத திசை?
பெரும்பாலானோர் பணம் மற்றும் விலையுர்ந்த பொருட்களையும் பணத்தையும் பீரோவில் தான் வைத்திருப்போம். எப்போதும் பணத்தை சேமிக்கும் பீரோ லாக்கரில் ஒற்றை கதவு தான் இருக்கவேண்டும். செல்வத்தின் கடவுளான குபேரனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் லாக்கர் அல்லது பீரோவை வடக்கு திசையில் வைக்க வேண்டும். மறந்து கூட வடகிழக்கு திசையில் லாக்கர்களையோ பீரோவையோ வைக்க வேண்டாம். இதனால் நிதி இழப்புகள், பண பிரச்சனை வரலாம்.