பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர் காலில் விழுந்த பின் கதறி அழுத ஜாக்குலின்!

First Published | Nov 14, 2024, 5:47 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சற்று முன் வெளியான புரோமோவில், ஜாக்குலின் ஆண் போட்டியாளர் ஒருவர் காலில் விழுவது போல் இடம்பெற்றுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Bigg Boss 8 task

விஜய் டிவியில் அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசனை போல் இன்னும் இந்த சீசன் சூடிபிடிக்க வில்லை என்றாலும், விதவிதமான பிரச்சனைகளை வித்தியாசமான டாஸ்க் மூலம் பிக்பாஸே கொளுத்தி போட்டு போட்டியாளர்களை முட்ட மோத வைத்துள்ளார்.

Bigg Boss This Week Eviction

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து, யாரும் எதிர்பாராத போட்டியாளரான சுனிதா வெளியேறிய நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ள பெண் போட்டியாளர் மூவரில் ஒருவர் தான் வெளியே செல்ல வாய்ப்புள்ளதாக அடித்து கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். இதற்க்கு காரணம் பழைய போட்டியாளர்கள் புதிதாக உள்ளே வந்துள்ள போட்டியாளர்களை வெளியே அனுப்ப கட்டம் கட்டி வருவதால், திறமையை வெளிப்படுத்தி மக்களை கவர வேண்டும் என்பதை மறந்து... பெண் போட்டியாளர்கள் மூன்று பெறும் தங்களை காப்பாற்றி கொள்ள சண்டை போடுவதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளனர்.

எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரை தான்; கங்குவா பட பிரபலத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை!

Tap to resize

School Task

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் பள்ளி மாணவர்களாகவும்... டீச்சர் மற்றும் ஹெட்மாஸ்டர் என ஒவ்வொரு ரோலாக மாறி நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தி வருகிறார்கள். இந்த டாஸ்கிங் படி ஜாக்குலின் மாரால் டீச்சராக இருக்கும் நிலையில், தீபக்கை பொடி வைத்து பேசியதாக அவர் கூறுகிறார்.

Jacquline Emotional

இதற்கு ஜாக்குலின் நான் எனக்கு கொடுத்த டாஸ்கை தான் செய்கிறேன். உங்களை பற்றி குறை சொல்லி... டாஸ்க் மூலம் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை என ஆவேசமாக பேசியதோடு, அப்படி பேசி இருப்பதாக நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு படக் என காலில் விழுந்துள்ளார். இது பார்பவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் மைக்கை கழட்டி போட்டு விட்டு பாத்ரூம் சென்று கதறி அழுகிறார். இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

குறையாத காதல்; கணவரோடு 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்! குவியும் வாழ்த்து!

Latest Videos

click me!