தமிழ்நாட்டில் சீரியல்கள் என்றாலே அது சன் டிவி தான் என்று இருந்த நிலையில், போகப் போக விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. ரசிகர்களின் வரவேற்பால் வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது 7 நாட்களும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீரியல்களின் வரவேற்பை தீர்மானிப்பது டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் இந்த ஆண்டின் 45-வது வாரத்திற்கான டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது.