எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரை தான்; கங்குவா பட பிரபலத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை!

First Published | Nov 14, 2024, 2:17 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள 'கங்குவா' பட பிரபலத்தை, வெளுத்து வாங்கும் விதமாக திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

Actor Suriya starrer Kanguva

கார்த்தி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெட்ரா, 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் அஜித்தை வைத்து, வீரம், விவேகம், வேதாளம், வலிமை, என தொடர்ந்து நான்கு படங்களை இயக்கி தமிழ் திரையுலகையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்தவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் முதல் முறையாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் 'கங்குவா'.

Kanguva Movie update

'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தபோதிலும், இதற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் சுமார் மூன்று வருடங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், பான் - இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என ஐந்து மொழிகளில் இன்று வெளியானது.

குறையாத காதல்; கணவரோடு 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்! குவியும் வாழ்த்து!

Tap to resize

Kanguva Cast

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்க, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். மேலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகி உள்ள இந்த திரைப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
 

Kanguva Review

கங்குவா திரைப்படம், ஃப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், படத்தை பார்த்த பிரபலங்கள் முதல் சென்சார் போர்டு வரை இப்படத்தை புகழ்ந்து தள்ளியதாக கூறப்பட்டது. அதே போல் இன்று காலை முதலே படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். பாகுபலி அளவுக்கு இப்படத்தின் கதையை கற்பனை செய்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும்... சூர்யாவின் நடிப்பு, படத்தின் விஷுவல், இசை போன்றவற்றிக்கு தங்களின் பாசிட்டிவ் விமர்சனந்த்தை கூறி வந்தனர்.

சூர்யாவின் 1000 நாள் உழைப்புக்கு பலன் கிடைத்ததா? 'கங்குவா' படத்தை பார்க்க வேண்டிய 5 காரணம்!
 

Devi Sri Prasad

அதே நேரம் ஒரு சிலர் கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், கங்குவா பட பிரபலத்தை வெளுத்து வாங்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய பதிவில், "எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரை தான். இருக்கிற இசைக்கருவிகளை கத்த விட்டது போதாதுன்னு, அண்டா, குண்டா, தோசை கரண்டியிலே கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சு இருக்காராம்ல என பதிவிட்டுள்ளார். 

Latest Videos

click me!