குறையாத காதல்; கணவரோடு 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்! குவியும் வாழ்த்து!

First Published | Nov 14, 2024, 12:58 PM IST

கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து... மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளார். ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

chaithra reddy

சன் டிவியில், கடந்த 2 வருடங்களுக்கு மேலாகவே டிஆர்பி-யில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ள 'கயல்' சீரியலில், கதாநாயகியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு, மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில்... தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

chaithra reddy

பெங்களூரைச் சேர்ந்த நடிகை சைத்ரா ரெட்டி, கடந்த 2014 ஆம் ஆண்டு கன்னட மொழியில் ஒளிபரப்பான 'அவனு மாத்தே ஷவானி' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் தமிழில் ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல் வரை' சீரியலின் ஒரிஜினல் பதிப்பாகும்.

இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு தமிழில் அமித் பார்கவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான கல்யாண முதல் காதல் வரை என்கிற சீரியல் ஒளிபரப்பானது. ப்ரியா பவானி சங்கருக்கு, இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், ஒரு வருடத்திலேயே சீரியலில் இருந்து விலகி வெள்ளித்திரை நாயகியாக மாறினார்.

சூர்யாவின் 1000 நாள் உழைப்புக்கு பலன் கிடைத்ததா? 'கங்குவா' படத்தை பார்க்க வேண்டிய 5 காரணம்!

Tap to resize

chaithra reddy

ப்ரியா பவானி சங்கர் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக கன்னடத்தில் ஹீரோயினாக நடித்து வந்த சைத்ரா ரெட்டியே தமிழிலும் கதாநாயகி வேடத்தை ஏற்று நடித்தார். இதைத் தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.

ஆனால் சைத்ரா ரெட்டியை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தான். இந்த தொடர் தான் தற்போது வரை, டி ஆர் பி-யில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேபோல் சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த 'டாப்பு குக்கூ டூப் குக்கூ' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்திய இவர், இரண்டாவது ரன்னரப்பாக மாறினார்.

chaithra reddy

சின்னத்திரை மட்டும் இன்றி, சைத்ரா ரெட்டி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'ரக்கட்' என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் சின்னத்திரையில் கவனம் செலுத்த துவங்கினார். மேலும் தமிழில் அஜித் நடித்த வலிமை மற்றும் விஷமக்காரன் என்கிற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சைத்ரா ரெட்டி, கடந்த 2000 ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சைத்ரா ரெட்டி தனக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகி விட்டதாக சமூக வலைதள பக்கத்தில், கணவருடன் எடுத்துக் கொண்ட கியூட் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்த நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பாபுவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய ஜெயலலிதா! அவரே கூறிய தகவல்!

Latest Videos

click me!