சூர்யாவின் 1000 நாள் உழைப்புக்கு பலன் கிடைத்ததா? 'கங்குவா' படத்தை பார்க்க வேண்டிய 5 காரணம்!

First Published | Nov 14, 2024, 11:47 AM IST

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டியதற்கான 5 காரணங்களை, இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

Kanguva

சூர்யா நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை ஆரவாரத்தோடு வெளியாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. தமிழில் உருவான இப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் - இந்தியா படமாக வெளியாகியுள்ளது. முன் பதிவிலேயே ரூ.20 கோடி வரை வசூலித்த இப்படம்... முதல் நாளிலேயே உலக அளவில் 100 கோடி முதல் 150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவினரின் 1000-நாள் உழைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்பதற்கான 5 காரணம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
 

Suriya

சூர்யா:

தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாகவும், வசூல் மன்னனாகவும் இருக்கும் சூர்யா... தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக, அந்த கேரக்டருக்காக அர்ப்பணிப்புடன் நடிப்பை வெளிப்படுத்துவார். அதே போல் கடந்த 3 வருடங்களாக படமாக்கப்பட்டு வந்த 'கங்குவா' படத்திலும் தன்னுடைய வசீகர நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். 

கங்குவா படத்தில் பல கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ள நிலையில், அதற்கான உழைப்பும் அலாதியானது. ஒவ்வொரு நாளும், பல ரத்த காயங்களை பெற்று... காடு, மேடு, மலை, வெளியில், மழை என பாராமல் பணியாற்றிய படக்குழுவினருக்கு ஈடுகொடுத்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சூர்யாவின் பரவசமூட்டும் நடிப்பை கண்டு ரசிக்க கண்டிப்பாக இந்த படத்தை நாம் பார்க்க வேண்டும்.

த்ரிஷா முதல் கௌசல்யா வரை; காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என முடிவு செய்த 7 முன்னணி நடிகைகள்!

Tap to resize

Pan - India Release

பான் - இந்தியா திரைப்படம்:

இதுவரை தமிழில் எத்தனையோ படங்கள் பான் - இந்தியா படங்களாக வெளியாகி இருந்தாலும், கங்குவா கிட்ட தட்ட பாகுபலி படத்திற்கு நிகரான ஒரு படைப்பாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் விதத்தில், ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் சிறுத்தை சிவா செலுத்தி உள்ளார். பான் - இந்தியா படம் என்பதற்கு நியாயம் சேர்க்கும் விதத்தில், இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் போன்ற ஏராளமான நடித்துள்ளனர். எனவே இந்த படத்தை கண்டிப்பாக 

Epic Scenes

வரலாற்று சிறப்பம்சம் கொண்ட காட்சிகள்:

கங்குவா படத்தில் சூர்யா ஒரு போர் வீரனாக நடித்துள்ள நிலையில், ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க காட்சிகள் இடம்பெற்றுள்ள. குறிப்பாக சூர்யா மற்றும் பாபி தியோல் இணைந்து சண்டை போடும் காட்சிகள் திரையரங்கில் தீ பொறி பறக்க இருக்கும் என கூறப்படுகிறது. சண்டை காட்சியில் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத பிரமாண்டத்தை காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் சிவா. அதே போல்... முதல் முறையாக இந்த படத்தில் முதலையோடு சூர்யா சண்டை போடுவது போல் இருக்கும் காட்சி பார்பதற்க்கே தாறுமாறாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்து வருவதால், இந்த அனுபவத்தை பெறவே ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும்.

கங்குவா ரிலீஸின் போது பிச்சுக்கிட்டு கொட்டப்போகும் மழை; வசூலுக்கு ஆப்பா? அதிஷ்டமா?

Karthi Cameo

கார்த்தியின் கேமியோ:

சூர்யா எப்போது அவருடைய தம்பியுடன் இணைந்து நடிப்பார் என்கிற கேள்வி, தமிழ் சினிமாவை பல வருடங்களாக துரத்தி கொண்டிருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு இந்த படத்தில் நிறைவடைந்துள்ளது. சூர்யாவுடன் கிளைமேக்ஸ் காட்சியில் கார்த்தியும் வந்து மிரட்டியுள்ளார். எனவே சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் என இருதரப்புக்கும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
 

Vishual and Music

விஷ்வல் மற்றும் இசை:

கங்குவா படத்தின் மிகப்பெரிய பலமாக அமைத்துள்ள இரண்டு விஷயங்கள் என்றால் அது... இப்படத்தின் விஷுவலை ஒளிப்பதிவாளர் காட்டிய விதம், மற்றும் தரமான கிராஃபிக் காட்சிகள். அதே போல், படத்தின் BGM  மற்றும் ஃபயர் பாடலில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இப்படத்தின் தனித்துவமான விஷுவல் மற்றும் இசைக்காக இந்த படத்தை மிஸ் பண்ணாமல் ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கலாம்.

மஞ்சள் காட்டு மைனாவாக மாறி வைப் செய்த ரம்யா பாண்டியன்! வைரலாகும் ஹல்தி புகைப்படங்கள்!

Latest Videos

click me!