3 படத்துக்கு பின் 2 வருஷமா ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கல - ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

Published : Nov 14, 2024, 11:11 AM IST

தனுஷுடன் 3 படத்தில் நடித்த பின்னர் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

PREV
14
3 படத்துக்கு பின் 2 வருஷமா ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கல - ஸ்ருதிஹாசன் ஆதங்கம்
Dhanush, Shruti Haasan

நடிகர் கமல்ஹாசன் - சரிகா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தான் ஸ்ருதிஹாசன். தன் தந்தையை போல் சினிமாவில் பன்முகத்திறமையாளராக வலம் வரும் ஸ்ருதி, முதலில் கமலின் உன்னைப்போல் ஒருவன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன்.

24
3 Movie

ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து அவர் நடித்த படம் 3. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஜனனி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதி. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் தனுஷின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இருப்பினும் படம் வெளியான சமயத்தில் ரசிகர்களை கவரத் தவறியதால், அப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும் தனுஷ் - ஸ்ருதியின் பள்ளிப்பருவ கதாபாத்திரங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

இதையும் படியுங்கள்... த்ரிஷா முதல் கௌசல்யா வரை; காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என முடிவு செய்த 7 முன்னணி நடிகைகள்!

34
3 Movie Failure

ரிலீஸ் ஆன போது தோல்வியடைந்த 3 திரைப்படம், சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆன போது அப்படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி இருந்தனர். இது ரிலீஸ் சமயத்தில் கிடைத்திருக்க கூடாதா என படக்குழு ஆதங்கப்பட்டாலும் தற்போதாவது படத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததே என சந்தோஷமும் அடைந்தனர். 3 படத்தின் தோல்வி தன்னுடைய சினிமா கெரியரை எந்த அளவு பாதித்தது என்பது பற்றி ஸ்ருதிஹாசனே ஓப்பனாக பேசி இருக்கிறார்.

44
Shruti Haasan about 3 Movie

அண்மையில் யூடியூபர் மதன் கெளரி உடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், 3 படத்துக்கு பின்னர் தான் 2 ஆண்டுகள் எந்தவித பட வாய்ப்புகளும் இன்றி கஷ்டப்பட்டதாக கூறி இருக்கிறார். பின்னர் ரீ ரிலீஸ் ஆனபோது தான் ஜனனி கேரக்டர் மக்களுக்கு பிடிக்கும் என்பதே எனக்கு தெரிந்தது. இருந்தாலும் நான் தமிழ் படங்களில் நடிப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். தற்போது கூட நான் தமிழில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என ஸ்ருதி கூறி இருக்கிறார். அவர் தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கூலி நிலைமை என்ன? ஸ்ருதியின் அதிரடி செயலால் குழப்பத்தில் லோகேஷ் கனகராஜ்!

click me!

Recommended Stories