கார்த்தி கேமியோ; ரோலெக்ஸ் என கங்குவா படத்தில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யங்கள் - ஒரு பார்வை

First Published | Nov 14, 2024, 8:50 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள கங்குவா திரைப்படத்தில் ஒளிந்திருக்கும் சில ஆச்சர்யங்கள் பற்றி பார்க்கலாம்.

Kanguva

கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் என வரிசையாக நான்கு படங்களை இயக்கிய அவர், முதன்முறையாக நடிகர் சூர்யா உடன் இணைந்து பணியாற்றி இருக்கும் திரைப்படம் கங்குவா. இது வரலாற்று கதையம்சம் கொண்ட ஃபேண்டஸி திரைப்படம் ஆகும். இப்படத்தில் சூர்யா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

Kanguva Suriya

கங்குவா திரைப்படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார் ஞானவேல் ராஜா. இப்படம் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகமெங்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் கங்குவா திரைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். கங்குவா படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கும் என சூர்யா, சிவா ஆகியோர் முன்பு அளித்த பேட்டிகளில் கூறி இருந்தனர். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Tap to resize

Suriya, karthi

கார்த்தி கேமியோ

கங்குவா படத்தில் கார்த்தி இருக்காரா? இல்லையா என்பதே படத்தின் ரிலீசுக்கும் முன் பெரிய கேள்வியாக இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில் கங்குவா படத்தின் கிளைமாக்ஸில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மேலும் கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீடும் கார்த்தியை வைத்து கொடுத்துள்ளனர். 

Rolex

டைட்டில் கார்டு

கங்குவா படத்திற்காக ஸ்பெஷல் டைட்டில் கார்டு ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அதில் சூர்யா இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அடங்கி இருக்க இறுதியாக ரோலெக்ஸின் முகம் வந்து சூர்யா என டைட்டில் போட்டுள்ளனர். இந்த டைட்டில் கார்டுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் விடப்பட்ட கங்குவா! ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

kanguva Crocodile Fight

முதலை சண்டை

கங்குவா படத்தில் பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியமான காட்சி என்றால் அது சூர்யா, முதலை உடன் சண்டையிடும் காட்சி தான். இந்திய சினிமா வரலாற்றிலேயே முதலையுடன் சண்டையிடும் காட்சி முதன்முறையாக கங்குவா படத்தில் தான் இடம்பெற்று உள்ளது. இந்த காட்சி பிரம்மிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Siva, Suriya, DSP

தேவி ஸ்ரீ பிரசாத்

கங்குவா படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான். பாடல்கள் ஒவ்வொன்று பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஃபயர் சாங் விஷுவல் வேறலெவலில் உள்ளது. இதுதவிர ஒரு ஸ்பெஷல் பாடலையும் படத்தில் சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடல் கேட்டவுடன் புல்லரிக்க வைக்கிறது.

Suriya Six Pack

சிக்ஸ் பேக்

கங்குவா படத்திற்காக நடிகர் சூர்யா 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் மீண்டும் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் சிக்ஸ் பேக்கை காட்டும்போது அரங்கமே அதிர்கிறது. அந்த அளவு ரீச் அந்த காட்சிக்கு இருந்தது.

இதையும் படியுங்கள்... தங்கலான் - கங்குவா; இந்த படங்களின் காம்போ உருவாக வாய்ப்பு இருக்கா? சூர்யா சொன்ன பதில் என்ன?

Latest Videos

click me!