சரத் பாபுவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய ஜெயலலிதா! அவரே கூறிய தகவல்!

First Published | Nov 13, 2024, 9:35 PM IST

திரையுலகில் நடிகர் - நடிகைகள் இடையே காதல் உறவு இருப்பதும், அவர்கள் சேர்ந்து வாழ்வதும்.. பின்னர் பிரிவதும் புதிதல்ல. அந்த வகையில் தெலுங்கு நடிகை ஜெயலலிதா சரத்பாபுவுடன் இருந்த உறவு குறித்து பகிர்ந்து கொண்டுள்ள தகவல் டோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.

Sarath Babu:

பிரபலங்கள் இடையே மலரும் காதல், பல சமயங்களில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமானதாக அமைகின்றது. சிலருக்கு அவர்களின் திரைப்படங்கள் போல நிஜ வாழ்க்கையும், அழகானதாக அமைவது இல்லை. பல கஷ்டமான முடிவுகளை சூழ்நிலை கருதி எடுக்கின்றனர். அப்படி தான் சரத் பாபுவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை பட்டும், அதை அவர் விரும்பவில்லை என தெலுங்கு நடிகை ஜெயலலிதா கூறியுள்ளார்.

Sarath Babu Marriage

நடிகர் சரத் பாபு தன்னுடைய இளம் வயதிலேயே, தன்னை விட வயதில் மூத்த நடிகையான ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, சரத் பாபுவும் ரமா பிரபாவும் பிரிந்தனர். ஒரு கட்டத்தில், ரமாபிரபா சரத் பாபு மீது சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தன்னால் வளர்ந்து தனக்கே அநீதி இழைத்ததாக கூறினார். அதே போல் சரத் பாபு தன்னுடைய சொத்துக்களை பறித்து கொண்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சரத் பாபுவும் ரமா மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். அந்த சமயத்தில் சரத் பாபு வாழ்க்கையில் பல காதல் கதைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

Tap to resize

இந்நிலையில் தெலுங்கு நடிகை ஜெயலலிதா, சரத் பாபுவுடன் சில காலம் சேர்ந்து வாழ்ந்தது உண்மை தான் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். தெலுங்கில் பல படங்களில் வில்லி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்துள்ள இவர், மகேஷ் பாபுவின் 'பாரத் அனே நேனு' படத்தில் சட்டமன்ற சபாநாயகர் வேடத்தில் நடித்து பிரபலமானவர். 

சரத் பாபு உடனான உறவு குறித்து அவர் பேசுகையில், "நாங்கள் இருவரும் மிகவும் அன்பாக இருந்தோம். எனக்காக கடவுள் அனுப்பிய வழிகாட்டி அவர். நான் அவரை 'பாவா' என்று அழைப்பேன். இருவரும் சேர்ந்து பல புனித யாத்திரைகள் மேற்கொண்டோம். ஒரு கட்டத்தில் அவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அவர் மூலம் ஒரு குழந்தையைப் பெற விரும்பினேன். நாங்கள் காதலிக்கும்போது, ​​திரையுலகை சேர்ந்த சிலர் எங்களைப் பிரிக்க முயன்றனர். அந்த முயற்சியில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றனர் என்பதே உண்மை.

இது போன்ற முயற்சிகளால்... என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள சரத் பாபு யோசித்தார். குழந்தைகளைப் பற்றிக் கேட்டால், யோசிக்கிறேன் என்றார். ஒருவேளை நாம் இறந்துவிட்டால், நம் குழந்தையைச் சொத்துக்காக உறவினர்கள் துன்புறுத்துவார்கள். அப்படி ஒரு சூழ்நிலை வேண்டாம் என்று சரத் பாபு என்னிடம் கூறினார். அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலர் இன்னும் என்னுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!