தமிழ் சினிமாவில் களமிறங்குவதற்கு முன்பாக, விமானப்படையில் பணியாற்றி வந்தவர் அவர். அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு முன்னதாக கூட விமான படையை சேர்ந்த அதிகாரிகள் அவருக்கு உரிய மரியாதையை அளித்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களும், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற திரை பிரபலங்களும் டெல்லி கணேஷ் மறைவிற்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகனாக பயணித்து வந்த அவர், ஒரு திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.