பாலிவுட் உலகில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற "பாகி 2", "பாரத்", "பாகி 3", "ராதே" போன்ற பல திரைப்படங்கள் திஷா பாட்னிக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்த சூழலில் தான் இந்த 2024 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் நடித்து வெளியாகி உலக அளவில் மிகப் பெரிய ஹிட்டான "கல்கி" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். இந்த சூழலில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக கங்குவா திரைப்படத்தின் மூலம் அவர் நாயகியாக களமிறங்கினார்.