இந்நிலையில் நேற்று மும்பை நகரில் நடைபெற்ற கங்குவா திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில், நடிகர் சூர்யாவை நோக்கி பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் வெளியான தங்கலான் திரைப்படமும் இப்போது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ள கங்குவா திரைப்படமும் ஒன்றாக இணைந்து ஒரே திரைப்படமாக எடுக்க வாய்ப்புகள் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டுமே பீரியட் ஃபிலிம்ஸ் என்பதால் இந்த கேள்வியை முன்வைக்கப்பட்டது.
ஆனால் அப்படி ஒன்று நடக்க சாத்தியம் இல்லை, காரணம் கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் இதைவிட பிரம்மாண்டமாக இருக்கும். முதல் பாகமும் அதற்கு ஏற்றார் போல பல சர்ப்ரைஸ் எலிமெண்ட்களுடன் தான் முடிவடையும் என்றும் கூறியிருக்கிறார் சூர்யா.