Amaran Movie
தமிழகத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான நிலையில், 13 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வசூலில் கெத்து காட்டி வருகிறது. இதுவரை 250 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ள நிலையில், படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால்... இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
Amaran Movie
அதாவது ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 28 நாட்களுக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்கிற உத்தரவு உள்ள நிலையில், 'அமரன்' படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால், எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
Amaran Movie OTT Release
மேலும், 'அமரன்' திரைப்படத்தின் வெற்றிக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உள்ளடக்கம் உள்ள திரைப்படம் ரசிகர்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என்பதற்கு 'அமரன்' படத்தின் மாபெரும் வெற்றியே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.