கங்குவா ரிலீஸின் போது பிச்சுக்கிட்டு கொட்டப்போகும் மழை; வசூலுக்கு ஆப்பா? அதிஷ்டமா?

Published : Nov 13, 2024, 04:33 PM IST

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில்,  நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா. படத்தின் ரிலீஸ் சமயத்தில் மழை பெய்ய உள்ளதாக வெளியாகும் தகவல் படத்திற்கு ஆதாயமாக அமையுமா? இல்லையா என்பதை பார்ப்போம்.  

PREV
15
கங்குவா ரிலீஸின் போது பிச்சுக்கிட்டு கொட்டப்போகும் மழை; வசூலுக்கு ஆப்பா? அதிஷ்டமா?
Actor Suriyas upcoming Kanguva film interest count

இந்திய ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடிகர் சூர்யா நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா தான் முதல் முறையாக சூர்யாவை வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள இந்த இப்படத்தின் கதைக்களம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சென்சார் போர்டு இந்த படத்திற்கு கொடுத்த விமர்சனம் படம் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. 

25
Actor Suriya Kanguva

“எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு, சூர்யா நடிப்பில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் இப்படம் வெளியாக உள்ளதால், சூர்யாவின் ரசிகர்கள் இப்படத்தை ஆரவாரத்தோடு வரவேற்க கார்த்திருக்கின்றனர். இந்த படத்தில் சூர்யா பல விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். ட்ரைலரில் சூர்யாவின் மாடர்ன் கதாபாத்திரம் மற்றும், போர் வீரனாக ஆக்ரோஷமான சூர்யாவையும் பார்க்க முடிந்தது.

மஞ்சள் காட்டு மைனாவாக மாறி வைப் செய்த ரம்யா பாண்டியன்! வைரலாகும் ஹல்தி புகைப்படங்கள்!

35
Kanguva Release in Rainy Days

சூர்யாவின் 3 வருட உழைப்பை ரசிகர்கள் திரையில் கண்டுகளிக்க தயாராக உள்ள நிலையில், நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல் இப்படத்தின் வசூலை பாதிக்குமா? என்பது குறித்து பார்க்கலாம். மழை நேற்று இரவு முழுவதும் சென்னை, புதுவை, கடலூர் போன்ற தமிழக பகுதிகளில் கொட்டி தீர்த்து வந்தாலும், படத்தின் புரோமோஷன் எந்த ஒரு தொய்வும் இன்றி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 

45
Kanguva Pre Booking Collection

அதே போல் நேற்று ஆன்லைன் புக்கிங் துவங்கிய நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 15 முதல் 20 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மழை கங்குவா படத்தின் ரிலீஸை எந்த வகையிலும் பாதிக்காது என்றாலும், படத்திற்கு பின் வெளியாகும் விமர்சனங்களே... மழையை தாண்டி ஃபேமிலி ஆடியன்ஸை வரவைக்கும் என்பது தெரிகிறது. 

நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி அக்‌ஷயா கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு! என்ன தெரியுமா?
 

55
Suriyas Kanguva Cast

இந்த பிரமாண்ட படத்தில், கல்கி பட நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க, பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories