நக்மா:
பாலிவுட் திரைப்படம் மூலம், திரை உலகின் தன்னுடைய கேரியரை துவங்கி இருந்தாலும், பின்னர் தெலுங்கு, தமிழ், போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க துவங்கியவர் நடிகை நக்மா. அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நக்மா அறிமுகமான திரைப்படம் 'காதலன்'.
நக்மா தன்னுடைய முதல் தமிழ் படத்திற்காகவே, சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். இதை தொடர்ந்து ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், பெரிய தம்பி, அரவிந்தன், ஜானகி ராமன், பிஸ்தா, போன்ற ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.
ஹீரோயின் வாய்ப்பு குறைந்த பின்னர் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த நக்மா, கடைசியாக தமிழில் சிட்டிசன் திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். பின்னர் போஜ்புரி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் நடிக்க தொடங்கினார். தமிழக அரசியலிலும் கலக்கி வந்த நக்மா, பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. பின்னர் நடிகர் சரத்குமாருடன் தொடர்பில் இருந்தார் என கிசுகிசு எழுந்தது. அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டதால், திருமணமே வேண்டாம் என முடிவு செய்து தற்போது வரை முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.