வசூல் என்கின்ற விஷயத்தை பொறுத்த வரை, கங்குவா திரைப்படம் உலக அளவில் 2000 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்யும் என்றும், முதல் நாளிலேயே உலக அளவில் கங்குவா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எளிதாக எட்டிவிடும் என்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உறுதியாக தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக பல்லாயிரம் கலைஞர்கள் தங்களுடைய உழைப்பை திறன்பட செயல்படுத்தி இருக்கிறார்கள், ஆகவே நிச்சயம் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறும் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் இது ஒரு பான் வேர்ல்ட் திரைப்படம் என்பதால், இந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு பான் இந்தியா நடிகராக மட்டுமல்லாமல், பான் வேர்ல்ட் நடிகராக சூர்யா மாற உள்ளதாக ஞானவேல் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.