இவங்களுக்கு 40 வயசுனு சொன்னா யாரு நம்புவா! காந்தக்கண்ணழகியாக ஈர்க்கும் நயன்தாரா!

First Published | Nov 14, 2024, 1:00 PM IST

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மாடர்ன் உடையில் காந்தக் கண்ணழகியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Nayanthara

ஹரி இயக்கிய ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நயன்தாரா. ஆரம்பத்தில் பப்ளியாக இருந்த நயன், பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறினார். அவர் ஸ்லிம் ஆன பின் நடித்த முதல் படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் நடித்திருந்தார் நயன்.

Actress Nayanthara

சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி உச்சத்தை தொட்டவர் நயன்தாரா. ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து வந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் அறம், மாயா, டோரா, ஐரா என தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வெற்றிகண்டார். இதனால் அவருக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது.

Tap to resize

Lady Superstar Nayanthara

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பிசியாக நடித்து வந்த நயன், கடந்த ஆண்டு ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

இதையும் படியுங்கள்... ஒரு எபிசோடு மிஸ் பண்ண மாட்டாங்க! நயன்தாராவின் பேவரைட் சீரியல் எது தெரியுமா?

Nayanthara Movies

ஜவான் படத்தை தொடர்ந்து நயன்தாராவுக்கு பான் இந்தியா பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். கீது மோகன் தாஸ் இயக்கும் இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு அக்காவாக நயன்தாரா நடித்து வருகிறார்.

Nayanthara Photos

இதுதவிர தமிழிலும் நடிகை நயன்தாரா கைவசம் மூன்று படங்கள் உள்ளன. அதில் ஒரு படம் மண்ணாங்கட்டி. இப்படத்தை டியூடு விக்கி என்கிற யூடியூப்பர் இயக்கி உள்ளார். இதுதவிர சசிகாந்த் இயக்கியுள்ள டெஸ்ட் படத்திலும் நடித்து முடித்துள்ளார் நயன். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது கவினுக்கு ஜோடியாக ஹாய் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்ணு எடவன் இயக்குகிறார்.

Nayanthara Latest Photoshoot

இப்படி 40 வயதிலும் செம்ம பிசியாக நடித்து வரும் நயன்தாரா, இன்னும் இளமை குறையாமல் இருப்பதே அவரின் மார்க்கெட் குறையாமல் இருப்பதற்கு காரணம். தன் அழகை மேலும் மெருகேற்றி தற்போது கை நிறைய ஆபரணங்களோடு, மாடர்ன் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து நடிகை நயன்தாரா நடத்தி உள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... விக்கி - நயன் திருமண வீடியோ; ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

Latest Videos

click me!