vuukle one pixel image

Bloody Beggar Movie: பிளடி பெக்கர் படத்துக்கு சரிப்பட்டு வரமாட்டானு சொன்னேன்! நெல்சன் ஓப்பன் டாக்!

vinoth kumar  | Published: Oct 19, 2024, 4:56 PM IST

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் பிளடி பெக்கர். சிவபாலன் முத்துக்குமார் இயக்கி உள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இதில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், அக்‌ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெல்சன் பேசியது: முதலில் இப்படத்திற்கு கதாநாயகனாக கவின் வேணும் என இயக்குனர் சிவபாலன் கூறும் போது நான் அதை மறுத்தேன். அப்பொழுது கவினின் டாடா திரைப்படம் வெளியாகவில்லை. சிவபாலனிடம் நீ நட்புக்காக எதுவும் செய்ய வேண்டாம் அதை தனியாக செய்துக்கொள் என்றேன். ஆனாலும் அவன் பிடிவாதமாக எனக்கு கவின் தான் கதாநாயகனாக வேண்டும் என்றான். படப்பிடிப்பு பணி முடித்தப்பின் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. கவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றார்.