
இந்தியா விண்ணுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது, பிரக்யான் ரோவர் லேண்டரில் இருந்து இறங்கி நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறது.
இந்நேரத்தில் இந்தியாவின் பிரக்யான் ரோவர் மட்டுமின்றி சீனாவின் யுடு 2 (Yutu 2) ரோவரும் நிலவில் ஆய்வு செய்துவருகிறது. சீனாவின் நிலவை ஆய்வு செய்யும் Chang'e 4 விண்கலம் 2019ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த இரண்டு ரோவர்களும் எவ்வளவு தூரம் உள்ளன? இவை இரண்டும் நேருக்கு நேர் சந்திக்குமா? என்ற கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ளலாம்.
சீன மொழியில் ஜேட் ராபிட் என்று அழைக்கப்படும் யுடு 2 (Yutu 2) ரோவரின் தற்போதைய நிலை குறித்த திட்டவட்டமான தகவல் ஏதும் சீனாவிடம் இருந்து வெளிவரவில்லை. ஆனால், சீனாவின் ரோவர் இன்னும் நிலவின் மேற்பரப்பில் பயணிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
3 மீ தொலைவில் பள்ளத்தைக் கவனித்து, வேறு பாதையில் நகர்ந்த பிரக்யான் ரோவர்!
ரோவர்களுக்கு இடையேயான தூரம்:
2019ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம்த தேதி நிலவின் வான் கர்மன் பள்ளத்தில் சாங்'இ-4 (Chang'e 4) விண்கலம் தரையிறங்கியது. நாசா அளிக்கும் தகவலின்படி, நிலவின் 45.4561 S அட்சரேகை, 177.5885 E தீர்க்கரேகை புள்ளியில் இந்த விண்கலம் தரையிறங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் 69.367621 S அட்சரேகை, 32.348126 E தீர்க்கரேகை புள்ளியில் தரையிறங்கி இருக்கிறது.
இந்த இரண்டு ரோவர்களுக்கிடையேயான தூரம் தோராயமாக 1,948 கிமீ இருக்கும் என்று இஸ்ரோவிலும் நாசாவிலும் பணிபுரிந்திருக்கும் முன்னாள் விஞ்ஞானி சையத் அகமது கூறுகிறார்.
மற்றொரு விண்வெளி நிபுணரான சண்முக சுப்ரமணியன், நிலவில் இரண்டு ரோவர்களுக்கு இடையேயான தூரம் தோராயமாக 1,891 கிமீ (± 5 கிமீ) இருக்கும் என்று சொல்கிறார்.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1! செப். 2ஆம் தேதி ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு!
பிரக்யான் ரோவர் சீன ரோவரைச் சந்திக்குமா?
இந்நிலையில், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் சீனாவின் யுடு 2 ரோவரைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
பிரக்யான் ரோவர் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஆய்வு செய்கிறது. பிரக்யான் ரோவர் தன்னைச் சுமந்து வந்த விக்ரம் லேண்டரில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், சீனாவின் ரோவர் யுடு 2 தரையிறங்கிய ஆரம்பப் புள்ளியில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவுக்கு நகர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
சீனாவின் ரோவரைப் போலல்லாமல், பிரக்யான் ரோவரின் பணி 14 நாட்கள் மட்டுமே இருக்கும். வரும் ஆண்டில், நிலவின் மேற்பரப்பில் இருந்து முதல் மாதிரிகளை சேகரிக்கும் திட்டத்தையும் சீனா செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.