சோனி நிறுவனத்தின் சோனி எக்ஸ்பீரியா 5 V மொபைல் செப்டம்பர் 1ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சோனி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்ட விளம்பர வீடியோவின் படி, புதிய சோனி எக்ஸ்பீரியா 5 V (Sony Xperia 5V) செப்டம்பர் 1, 2023 அன்று வெளியிடப்படும். இந்த ஸ்மார்ட்போன் Sony Xperia 5 IVக்கு அடுத்தபடியாக சந்தைகளில் வரும் என்று தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் சோனி எக்ஸ்பீரியா 5 V-இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் எதையும் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த மொபைல் ஆனது இரட்டை பின்புற கேமராவை கொண்டிருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. மேலும் Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படும். சோனி எக்ஸ்பீரியா 5 V உள்ளூர் நேரப்படி அன்று மாலை 4 மணிக்கும் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கும் அறிமுகப்படுத்தப்படும்.
undefined
சோனி எக்ஸ்பீரியா 5 வி - எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
1.Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகிறது.
2.ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் வரக்கூடும்.
3.சோனியின் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மேட் பினிஷிங் மற்றும் பின்புறத்தில் நிறுவனத்தின் பிராண்டிங்குடன் வெளியிடப்படலாம்.
4.ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகிறது.
5.கைபேசி 8ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் வகைகளுடன் வெளியிடப்படும், மேலும் கூடுதல் வேரியண்ட் பின்னர் வெளியிடப்படலாம்.
6.5000 mAh பேட்டரி, 33 W பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும்.
7.சோனி எக்ஸ்பீரியா 5வி விலை இன்னும் நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ஆன்லைன் அறிக்கைகளின்படி, கைபேசியின் விலை ரூ.79,990 முதல் 1,14,700 வரை இருக்கலாம்.