மாருதி சுசுகி நிறுவனம் ஹேச்பேக் பிரிவில் லாபின் எல்.சி. பெயரில் புது ஆல்டோ மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பழைய ஹேச்பேக் மாடலாக ஆல்டோ இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஆல்டோ மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருந்ததோடு, அதிக பிரபலமான ஹேச்பேக் மாடலாகவும் இருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆல்டோ சிறிய காரின் பேஸ்லிப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்: முழு சார்ஜ் செய்தால் 1202 கி.மீ. ரேன்ஜ்... பட்டையை கிளப்பிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார்..!
இந்த நிலையில், ஜப்பான் நாட்டு சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் லாபின் எல்.சி. பெயரில் புது ஆல்டோ மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஆல்டோ மாடல் ஏராளமான அம்சங்கள் மற்றும் ரெட்ரோ தோற்றம் கொண்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இது பற்றி மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
விலை விவரங்கள்:
புதிய ஆல்டோ லாபின் எல்.சி. மாடலின் விலை ஜப்பான் நாட்டு சந்தையில் 14 லட்சம் யென், இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லாபின் எல்.சி. மாடல் 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. மாருதி சுசுகி ஆல்டோ லாபின் எல்.சி. டாப் எண்ட் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் ஹைப்ரிட் கார்... அசத்தல் டீசர் வெளியிட்ட டொயோட்டா...!
சுசுகி ஆல்டோ லாபின் எல்.சி. மாடலில் 660சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 63 ஹெச்.பி. வரையிலான செயல்திறன் வெளிப்படுத்துகிறது. ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஆல்டோ லாபின் எல்.சி. மாடலின் அம்சங்கள் இந்தியாவில் கிடைக்கும் ஆல்டோ மாடலை பெருமளவு வித்தியாசமாக உள்ளது.
இந்த ஹேச்பேக் மாடலின் டிசைன் முற்றிலும் புதிதாக உள்ளது. மேலும் ஜப்பான் நாட்டு சந்தையில் கிடைக்கும் கெய் மற்றும் சிறிய கார்களை போன்று காட்சி அளிக்கிறது. இதன் ஒட்டு மொத்த தோற்றம் சதுரங்க வடிவம் மற்றும் ரெட்ரோ டிசைன் கொண்டு இருக்கிறது. இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட்கள், அனைத்து பக்கவாட்டு பகுதிகளிலும் பெரிய கிளாஸ் காணப்படுகிறது. இதில் உள்ள வித்தியாசமான கிரில் ஹேச்பேக் மாடலை தனித்தவப் படுத்தி காண்பிக்கிறது.
இதர அம்சங்கள்:
இது மட்டும் இன்றி புதிய ஆல்டோ லாபின் எல்.சி. மாடல் ஏராளமான அம்சங்களை கொண்டு இருக்கிறது. வழக்கமாக சுசுகி கார்களில் உள்ள கண்ணாடிகள் புற ஊதா கதிர்களில் இருந்து 99 சதவீத பாதுகாப்பை வழங்குவசை போன்றே இந்த மாடலில் உள்ள கண்ணாடிகளும் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த காரின் முன்புற இருக்கைகளில் ஹீட்டிங் வசதி உள்ளது. மேலும் இதில் முழுமையான ஆட்டோமேடிக் வசதி கொண்ட ஏ.சி., அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் டில்ட் வசதி கொண்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: விலை ரூ. 74 ஆயிரம் தான்... ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட பேஷன் பைக் அறிமுகம்..!
ஆல்டோ லாபின் எல்.சி. மாடலில் கீலெஸ் எண்ட்ரி சிஸ்டம், புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் அம்சம் உள்ளது. இதன் டேஷ்போர்டில் 7 இன்ச் டிஜிட்டல் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் பார்கிங் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதன் டிரைவர் டிஸ்ப்ளேவில் மைலேஜ், ரேன்ஜ் மற்றும் வாகனம் சார்ந்த இதர விவரங்கள் காண்பிக்கப்படுகிறது.