இயர்பட்ஸ் மாடலில் H1 சிப்செட் வழங்கப்படும் என்றும் இது செல்ப்-அடாவ்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஹியரிங் ஏய்ட் அம்சம், ஹார்ட் ரேட் டிடெக்ஷன் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. புது இயர்பட்ஸ் அம்சங்கள் மட்டும் இன்றி ரெண்டர்களும் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் முந்தைய மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஏர்பாட்ஸ் ப்ரோ 2:
இத்துடன் முந்தைய மாடலை போன்ற ஸ்டெம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஸ்டெம் வழங்கப்படாது என கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில், தற்போதைய தகவல்களில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் ஸ்டெம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் மாடலில் H1 சிப்செட் வழங்கப்படும் என்றும் இது செல்ப்-அடாவ்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் மேம்பட்ட ஃபைண்ட் மை ஃபன்ஷன், ஹார்ட் ரேட் டிடெக்ஷன், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹியரிங் ஏய்ட் அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் மூலம் இயர்போன்களை ஹியரிங் ஏய்ட் போன்றும் பயன்படுத்த வழி செய்கிறது.
இத்துடன் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் பயனர் விவரங்களை சேகரித்து, உடல் வெப்ப அளவை கொண்டு ஹார்ட் ரேட் மாணிட்டரிங் வசதியை வழங்குகிறது. இந்த இயர்போனில் செல்ப்-அடாப்டிவ் ஈக்வலைசேஷன், ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்களும் வழங்கப்படுகிறது. ரெண்டர்களின் படி புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இதன் சார்ஜிங் கேஸ் கீழ்புறம் ஸ்பீக்கருடன் வரும் என தெரிகிறது.
ஏர்பாட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்கள் முந்தைய மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த இயர்போனில் ஆப்பிள் நிறுவனம் டூயல் ஆப்டிக்கல் டிடெக்ட் சென்சார்களை வழங்காது என கூறப்படுகிறது.