ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த திறன் கொண்ட பேட்டரி வேரியண்டிலும் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரைவில் தனது 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 450X மாடல் பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான ஏத்தர் எனர்ஜியின் பிளாக்ஷிப் ஸ்கூட்டர் மாடல் ஆகும். தற்போது ஏத்தர் நிறுவனம் தனது 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்: முழு சார்ஜ் செய்தால் 1202 கி.மீ. ரேன்ஜ்... பட்டையை கிளப்பிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார்..!
ஏத்தர் 450X மாடலில் தற்போது 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 116 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஏத்தர் 450X மாடலில் 3.66 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 146 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
அனுமதி பெற்ற ஏத்தர் எனர்ஜி:
புதிய 450X மாடலுகாகன ARAI சான்றிதழை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து புதிய 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பெற இருக்கிறது. இத்துடன் புதிய ஏத்தர் 450X மாடல் பல்வேறு ரைடு மோட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: காப்புரிமையில் கசிந்த ரகசியம்... இணையத்தில் வெளியான பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் மாடல் விவரங்கள்..!
இது மட்டும் இன்றி புதிய ஏத்தர் 450X மாடலில் ராப் மோட், ஸ்போர்ட் மோட், ரைடு மோட், ஸ்மார்ட் ஈகோ மோட் மற்றும் ஈகோ மோட் உள்ளிட்டவை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் ராப் மோட் ஓலா S1 ப்ரோ மாடலுக்கு போட்டியாக சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் 450X மாடலை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3.35 மணி நேரங்கள் ஆகும். டிசி பாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது பத்து நிமிடங்களில் 15 கி.மீ. ரேன்ஜ் கிடைக்கும். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த திறன் கொண்ட பேட்டரி வேரியண்டிலும் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. எனினும், இது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.