முழு சார்ஜ் செய்தால் 1202 கி.மீ. ரேன்ஜ்... பட்டையை கிளப்பிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார்..!

By Kevin Kaarki  |  First Published Jun 26, 2022, 12:25 PM IST

மெர்டிஸ் பென்ஸ் விஷன் EQXX  எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் உலகின் தலைசிறந்த ஏரோடைனமிக் டிசைன் கொண்ட மாடலாக உருவாகி இருக்கிறது.


மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் சிங்கில் சார்ஜ் செய்து ஆயிரம் கிலோமீட்டர் ரேன்ஜ் கிடைத்ததாக கடந்த ஏப்ரல் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஜெர்மனியில் இருந்து தெற்கு பிரான்ஸ் வரையிலான பயணத்தின் போது இந்த கான்செப்ட் மாடல் 1008 கி.மீ. ரேன்ஜ் வழங்கி அசத்தியது. 

தற்போது இந்த எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் அதன் முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறது. இந்த முறை மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் சில்வர்ஸ்டோனில் இருந்து ஜெர்மனியை அடுத்த ஸ்டகர்ட் பகுதிக்கு சென்று அசத்தி இருக்கிறது. இந்த பயணத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX மாடல் சிங்கில் சார்ஜ் செய்ததில் 1,202 கி.மீ. ரேன்ஜ் வழங்கி இருக்கிறது. 

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்: 110 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்வளவு தெரியுமா?

மிக நீண்ட ரேன்ஜ்:

பயண நேரம் மொத்தத்தில் இரண்டு நாட்கள், 14 மணி நேரம், 30 நிமிடங்கள் ஆகும். இந்த பயணத்தில் ஒவ்வொரு 100 கி.மீ. தூரத்திற்கும் 8.3 கிலோவாட் ஹவர் மின்திறன் எடுக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை தூரத்தை கடந்து இருப்பதன் மூலம் மெர்சிடிஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார்கள் அதிக ரேன்ஜ் வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இந்த பயணத்தின் போது மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் பிரெஞ்சு எல்லைப் பகுதியான ஸ்டிராஸ்போர்க், யூரோடனல், லண்டன் அருகில் உள்ள M25 பகுதிகளை கடந்து பிராக்லியில் உள்ள மெர்சிடிஸ் AMG பெட்ரோனஸ் ஃபார்முலா ஒன் டீம் ஆலைக்கு வருகை தந்தது. இதன் பின் சில்வர்ஸ்டோன் பந்தய களத்திற்கும் வந்தது. இந்த கார் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சென்று இருக்கிறது. இதன் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. ஆக இருந்தது.

இதையும் படியுங்கள்: பழைய மாருதி 800-ஐ சோலார் காராக மாற்றிய ஆசிரியர்...!

ஏரோடைனமிக் டிசைன்: 

மெர்டிஸ் பென்ஸ் விஷன் EQXX  எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் உலகின் தலைசிறந்த ஏரோடைனமிக் டிசைன் கொண்ட மாடலாக உருவாகி இருக்கிறது. இதுவும் இந்த கார் இத்தனை கி.மீ. ரேன்ஜ் வழங்க காரணம் ஆகும். இத்துடன் இந்த காரின் கீழ்புறத்தில் கூலிங் பிளேட் உள்ளது. இது பேட்டரியில் இருந்து சராசயாக 20 கி.மீ. வரை அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இந்த காரில் 245 பி.எஸ். எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 100 கிலோவாட் பேட்டரி கொண்டுள்ளது.

click me!