15000mAh பேட்டரி கொண்ட புது ஸ்மார்ட்போன்... ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published Jun 26, 2022, 1:59 PM IST

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பேஸ் அன்லாக் வசதி உள்ளது. 


ஹாட்வேவ் W10 ரக்கட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ராணுவ தரத்தால் ஆன டியுரபிலிட்டி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சம் அதில் உள்ள 15,000mAh பேட்டரி தான். இந்த ஸ்மார்ட்போன் 1200 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இது தவிர இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் HD+ டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கோர் பிராசஸர் போன்ற அம்சங்கள் உள்ளன. 

இதையும் படியுங்கள்: ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நீண்ட பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்போன்கள்... டாப் 5 பட்டியல்..!

Tap to resize

Latest Videos

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பேஸ் அன்லாக் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க டூயல் கேமரா செட்டப், 13MP பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் 5MP செல்பி கேமரா யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஹாட்வேவ் W10 அம்சங்கள்:

- 6.53 இன்ச் HD+ 120x1600 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்
- 4GB ரேம்
- 32GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13MP பிரைமரி கேமரா
- இரண்டாவது கேமரா சென்சார்
- 5MP செல்பி கேமரா
- 15000mAh பேட்டரி
- 18 வாட் வயர்டு சார்ஜிங்
- ரிவர்ஸ் சார்ஜிங்
- MIL-STD810H சான்று
- IP68 மற்றும் IP69K தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்

இதையும் படியுங்கள்:  ரூ. 899 விலையில் புது இயர்பட்ஸ் அறிமும்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய ஹாட்வேவ் W10 ஸ்மார்ட்போன் அலி எக்ஸ்பிரஸ் தளத்தில் நாளை (ஜூன் 27) விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 99.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை தான், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11 ஆயிரம் என மாறி விடும். இந்த ஸ்மார்ட்போன் கிரே மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

click me!