இந்த காரணத்திற்காக பயனர்கள் தங்களின் செல்பி வீடியோவை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலியாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எனினும், செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
இதன் காரணமாக இன்ஸ்டாகிராம் தளத்தில் வரும் 18+ பதிவுகளை அனைவரும் பார்க்கக்கூடிய சூழல்களும் இருக்கின்றன. இந்த சூழல் சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக விளங்குகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் விரைவில் புது அம்சம் ஒன்றைு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
undefined
இதையும் படியுங்கள்: ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, இலவச ஏராப்ட்ஸ்... வருடாந்திர சலுகையை துவங்கிய ஆப்பிள்..!
புது தொழில்நுட்பம்:
புது அம்சம் மூலம் யோடி (Yoti) எனும் தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கு ஏற்று வகையில் அவர்களுக்கு தேவையான தரவுகளை காண்பிக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக பயனர்கள் தங்களின் செல்பி வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
யோடி தொழில்நுட்பம் மூலம் செல்பி வீடியோவில் உள்ள பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற வகையில் வீடியோக்களை காண்பிக்கும் என கூறப்படுகிறது. வயதை சரிபார்த்த பின் செல்பி வீடியோ மெட்டா மற்றும் யோடி தொழில்நுட்பத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் ஐபோன் 13 போன்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்...!
சரியான தரவுகள்:
புது அம்சம் மூலம் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையிலான தரவுகளை வழங்க முடியும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது. “ஆன்லைனில் ஒருவரின் வயதை அறிந்து கொள்வது சந்தை ரீதியில் மிகவும் சவால் மிக்க காரியம் ஆகும். நம் துறையில் மற்ற நிறுவனங்கள், அரசாங்கங்கள மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம், இதன் மூலம் ஆன்லைனில் சிறப்பாக வயதை கணக்கிட முடியும்,” என இன்ஸ்டாகிராம் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஒரு வேளை பயனர் தங்களின் அடையாள சான்றின் புகைப்படத்தை வழங்க முடிவு செய்தால், அது தொடர்பான புகைப்படம் 30 நாட்களுக்குள் நீக்கப்பட்டு விடும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.