செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட விபத்து தடுப்பு கருவியில் உள்ள சென்சார்கள் டிரைவரின் கண்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவருக்கு சோர்வு ஏற்படும் நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குகிறது.
இந்திய ராணுவம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான விபத்து தடுப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. அது ஓட்டுநரின் செயல்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் அவர் தூங்கினால் சத்தமாக ஒலி எழுப்பி எச்சரிக்கும் அம்சங்கள் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவ அதிகாரி கர்னல் குல்தீப் யாதவ் இந்த சாதனத்தை உருவாக்கி 2021ஆம் ஆண்டிலேயே உருவாக்கியுள்ளது.
அதற்கு அவர் காப்புரிமைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த மாதம் அவரது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. விபத்துகளைத் தவிர்க்க மிகவும் செலவு குறைந்த தீர்வாக இது கருதப்படுகிறது.
undefined
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்த விபத்துத் தடுப்பு சாதனம், எந்த வாகனத்திலும் பொருத்தி பயன்படுத்த முடியும். அகற்றுவதும் எளிதானது. வாகனத்தின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் கொண்ட சாதனம் ஓட்டுநரின் கண்களைக் கண்காணித்து, அவர் தூங்கினால் அவரை எச்சரிக்கும்.
மலைகள், பாலைவனங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பல்வேறு நிலைகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பின்னர் இந்திய ராணுவத்தின் அனைத்து வாகனங்களிலும் இந்தக் கருவி பொருத்தப்பட்டு வருவதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காப்புரிமை பெறுவதற்கு முன், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட இரு மாநில போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் இந்த செயற்கை நுண்ணறிவு விபத்து தடுப்பு சாதனம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இதை லாரிகளிலும் பயன்படுத்தலாம் என ராணுவ அதிகாரி கூறுகிறார்.
பைக்கில் சுய இன்பம் செய்துவிட்டு பெண்ணுக்கு 'லவ் யூ' மெசேஜ் அனுப்பிய ராபிடோ டிரைவர்
கர்னல் குல்தீப் யாதவ், மணிப்பூரில் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கியபோது, அத்தகைய கருவியை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளார். மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் சோர்வடைந்து தூங்குவதால் விபத்து ஏற்படுகிறது. அத்தகைய விபத்துகளைத் தவிர்க்க இந்த சாதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2021ஆம் ஆண்டில், நாட்டில் சாலை விபத்துக்களில் சுமார் 1.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 57 சதவீதத்துக்கும் அதிகமான லாரி விபத்துக்கள் ஓட்டுநர்கள் தூங்குவதால் ஏற்படுகின்றன. "இராணுவ வாகனங்கள் தவிர, லாரிகள் மற்றும் பேருந்து விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க இந்த சாதனம் மிகவும் பயனுள்ளது" என்று கர்னல் குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஆன்லைனில் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்தவருக்கு 8 அட்வைஸ்! எஸ்பிஐ சொல்வது என்னென்ன தெரியுமா?