ட்ரூ காலரில் அசத்தல் அம்சம்: பயனர்களுக்கு பதிலாக ஃபோன் பேசும் AI

By Manikanda Prabu  |  First Published Jul 21, 2023, 3:55 PM IST

ட்ரூ காலர் செல்போன் ஆப் புதியதாக அசிஸ்டண்ட் அழைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Truecaller Assistant’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI அடிப்படையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


ட்ரூ காலர் நிறுவனத்துக்கு உலகம் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கிறார்கள். தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கவும், அழைப்பு வரும் எண் யாருடையது என்பதை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு அமசங்கள் ட்ரூ காலர் ஆப்பில் உள்ளன. மேலும், தங்களது பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்களையும் ட்ரூ காலர் வழங்கி வருகிறது.

அந்த வகையில், ‘Truecaller Assistant’ அம்சத்தை இந்தியாவில் ட்ரூ காலர் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI அடிப்படையில் செயல்படுகிறது. உங்கள் சார்பாக அழைப்புகளுக்கு AI பதிலளிக்கும். Truecaller Assistant ஐந்து வெவ்வேறு குரல்களில் கிடைக்கிறது. வெவ்வேறு மொழிகளைப் புரிந்துகொள்ளும் அடிப்படையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

நீங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தாலோ, அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலோ அல்லது உரையாடலைத் தவிர்க்க நீங்கள் விரும்பினாலோ ‘Truecaller Assistant’ உங்களுக்கு பதிலாக அந்த அழைப்பு ஏற்று பேசும். இந்த அதிநவீன அம்சம், உங்கள் சார்பாக தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் குரல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. 

இன்டர்நெட் ஸ்பீட்.. உலக அளவில் முதலிடம் பிடித்த UAE - அங்க டவுன்லோட் ஸ்பீட் என்னென்னு தெரியுமா?

Truecaller Assistant பயனர்களுக்கு ஆண் மற்றும் பெண் என ஐந்து வெவ்வேறு குரல்களில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவையான குரலை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்பட பிராந்திய மொழிகளை புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் சலுகையாக, Truecaller Assistant அனைத்து பயனர்களுக்கும் 14 நாட்கள் சோதனை அடிப்படையில் இலவசமாக கிடைக்கிறது. அதன்பிறகு, Truecaller பிரீமியத்திற்குச் சந்தா செலுத்துவதன் மூலம், சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். மாதத்திற்கு ரூ 149 அல்லது வருடத்திற்கு ரூ 1,499 என Truecaller சந்தா கிடைக்கிறது. மேலும், Truecaller Gold சந்தாவும் உள்ளது. இந்த சந்தாவை பெற ஆண்டுக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

Truecaller Assistant அம்சத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?


** உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் Truecaller ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும். ஏற்கனவே இருந்தால் அப்டேட் செய்ய வேண்டும்

** Truecaller செயலியை ஒப்பன் செய்து கிடைக்கக்கூடிய தேர்வுகளில் இருந்து விருப்பமான குரலைத் தேர்ந்தெடுக்கவும்

** நீங்கள் அதை அமைத்த பிறகு, உங்கள் உதவியாளர் அழைப்புகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பார். அதாவது AI தயாராக இருக்கும்

** உங்களுக்கான அழைப்புகளுக்குப் பதிலளிக்க Assistant வேண்டும் என்றால் அதனை தேர்ந்தெடுக்கலாம்

** உங்கள் தொலைபேசியை நீங்கள் எடுக்கவில்லை என்றால், உங்கள் அசிஸ்டண்ட் தானாகவே பதிலளிக்கும்

** கூடுதலாக, உங்கள் Assistant-க்கான வரவேற்புச் செய்தியையும் நீங்கள் பதிவிட்டுக் கொள்ளலாம். அதாவது உங்களுக்கு பதிலாக உங்கள் போனை அட்டெண்ட் செய்யும் Assistant, போனை எடுத்ததும் என்ன சொல்ல வேண்டும் என நீங்கள் பதிவிட்டுக் கொள்ளலாம். வணக்கம் நான் இவரது உதவியாளர்; நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள் என்ற கேள்விகள் போன்று.

செல்போனுக்கு அழைப்பு வரும்போது, AI- அடிப்படையிலான குரல் உதவியாளரை அதற்கு பதிலளிக்க பயனர்கள் Assistant-யை தேர்வு செய்யலாம். பதிலளிக்கப்படாத அழைப்பின் போது, ட்ரூகாலர் உதவியாளர் தானாகவே பதிலை வழங்கும். முக்கியமான அழைப்புகள் உடனடியாக கவனிக்கப்படுவதையும் உறுதி செய்யும்

மெய்நிகராக செயல்படுவதால், Truecaller Assistant உங்களது தனிப்பட்ட உதவியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அழைப்பாளர்களுக்கு பதிலளிக்கும். இது அழைப்பின் நோக்கத்தைப் பற்றியும் விசாரிக்கிறது. நீங்கள் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பதிலளிக்க முடியாவிட்டாலும், அழைப்புக்கான நோக்கத்தை Truecaller Assistant உங்களுக்காக பெற்று தரும்.

Truecaller Assistant ஆனது, தொலைபேசி உரையாடல்களின் போது பேசப்படும் வார்த்தைகளை எழுதப்பட்ட உரையாக உடனடி டிரான்ஸ்கிரிப்ஷன்களை உங்களுக்கு வழங்கும். இது நடந்துகொண்டிருக்கும் உரையாடலை சிரமமின்றி நீங்கள் புரிந்துகொள்ள உதவுகிறது. நிகழ்நேரத்தில் நீங்கள் உங்களது செல்போனில் அதனை படிக்கலாம். மேலும், அழைப்பை பதிவுசெய்து, பின்னர் விவரங்களை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பும் இந்த அம்சத்தில் உள்ளது.

நீங்கள் மீட்டிங்கில் இருக்கும்போதோ, வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதோ அல்லது தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்க விரும்பினாலும் இந்த AI அடிப்படையிலான Truecaller Assistant அம்சத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

click me!