ஏர்டெலில் 148 ரூபாய்க்கு அற்புதமான பலன்களுடன் கூடிய ரீசார்ஜ் திட்டம் உள்ளது. இது மிகமுக்கியமாக டேட்டா விரும்பிகளுக்கு ஏற்ற திட்டமாகும்.
இந்தியாவில் ஜியோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக பெரிய நெட்வொர்க் ஏர்டெல் நிறுவனம் உள்ளது. ஏர்டெலில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில் தற்போது 140 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய டேட்டா பலன்களை பெறமுடியும். குறிப்பாக 15 ஜிபி கூடுதலாக கிடைக்கிறது. இது 28 நாட்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் தளத்தை பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.
இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீமில் பல தளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. அதாவது SonyLIV, LionsgatePlay, Eros Now, Hoichoi, இன்னும் பல தளங்கள் கிடைக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு இந்த தளங்களை பார்க்க முடியும். ஏர்டெல் தளத்திற்கான சந்தா காலம் 28 நாட்கள் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் அந்த குறிப்பிட்ட வேலிடிட்டி நாட்களில் ஒரு தளத்தை மட்டுமே வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Airtel, Jio, Vi, BSNL எதில் குறைந்த கட்டணம்.. இதோ முழு விவரங்கள்!
148 ரூபாய்க்கு 15 ஜிபி எனும்போது, ஒரு ஜிபி டேட்டாவின் விலை 9.86 ரூபாய் என்ற வகையில் அமைகிறது. இதைத்தவிர இன்னும் சில டேட்டா பேக்குகளும் உள்ளன. 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி டேட்டா ஒருநாள் வேலிடிட்டி உடன் வருகிறது.
58 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் பிளான் உள்ளது. அதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அண்மையில் 65 ரூபாய்க்கான டேட்டா பேக்கை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதில் 4 ஜிபி டேட்டா என்ற விதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் டேட்டா பேக் மட்டுமே. அதன் வேலிடிட்டி அந்தந்த பிளானுக்கு ஏற்ப மாறுபடும்.
ஏர்டெலில் உள்ள முழுமையான டேட்டா பேக் பற்றிய விவரங்களுக்கு ஏர்டெலின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஏர்டெல் ஆப் ஆகியவற்றை பார்க்கவும். வரும் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏர்டெலில் இன்னும் பல புதிய ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.