வயதானவர்கள் கன்னித்தன்மைக்கு முக்கியத்துவம் தருவது ஏன்..?

By Dinesh TG  |  First Published Dec 10, 2022, 5:59 PM IST

இன்றைய காலத்தின் பெண்களின் கன்னித்தன்மை பற்றி பல்வேறு விவாதங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்கள் வயதானவர்களிடம் அதிகம் பார்க்க முடிகிறது. 
 


கடந்த காலங்களில் இருந்த பல நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இப்போது மறைந்து வருகின்றன. ஆண்களுக்கு நிகரான பணியை பெண்களும் செய்து வருகின்றனர். திருமணத்திற்கு முன் உடல் ரீதியிலான உறவை வைத்துக் கொள்வது இந்த நாட்களில் பொதுவானது என்றாலும், இந்தியாவில் இன்னும் பலர் கன்னித்தன்மையைப் பற்றி தங்கள் சொந்த நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். 

இன்றைய இளைஞர்கள் கன்னித்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும், வயதானவர்களிடம் அது ஒரு பெரிய காரியமாகவே உள்ளது. திருமணத்தை தொடர்ந்து நடக்கும் உடலுறவின் போது தான், ஆணும் பெண்ணும் கன்னித்தன்மையை இழப்பதாக ஒருசிலர் நம்புகின்றனர். அதனால் முதலுரவின் போது, எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை என்றால் பெண்களை சந்தேகிக்கும் குணமும் பலரிடம் உள்ளது. இதுபோன்ற எண்ணம் வயதான ஆண்களிடம் அதிகம் பார்க்கப்படுகிறது. இளைஞர்களிடம் அதுபோன்ற நம்பிக்கைகள் அரிதாகவே உள்ளது.

Tap to resize

Latest Videos

கன்னிப் பெண்ணை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது எளிது என்பது வயதான ஆண்களின் எண்ணமாக உள்ளது. குறிப்பிட்ட ஆண்கள், தன்னுடைய நம்பிக்கைகளையும் மதிப்புகளையும் வயது குறைந்த பெண் மீது எளிதாக திணிக்கலாம் என்று நம்புகின்றனர். அதேபோல சிறிய வயது பெண் கணவருக்கு அடங்கி இருப்பாள் என்பதும் வீட்டுப் பெரியவர்களின் எண்ணமாக உள்ளது.

ரோல்பிளே உடலுறவு மூலம் உறவில் புதுமையை பேணும் காதலர்கள்..!!

கன்னிப் பெண்ணுடன் இணைந்து வாழும் போது, அந்த ஆணுக்கு சமூகத்தில் சுயமரியாதை அதிகரிக்கிறது. இதன்மூலம் அவன் சார்ந்துள்ள தொழிலும் வரிவடைகிறது. ஆனால் பெண்களுக்கான விஷயத்தில் இது அப்படியே எதிர்நிலையாக மாறிவிடுகிறது. பணிக்கு செல்வதற்கு, சமூகத்துடன் இணக்கமாக இருப்பதற்கும் மற்றும் சுய விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கும் பெண்ணுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

வயதான ஆண்கள் கன்னிப் பெண்களை மணந்துகொள்வதற்கு மற்றொரு காரணம் பொறாமை. இதன்மூலம் சமூகத்தில் அந்த ஆணுக்கு கவனம் அதிகரிக்கிறது. இதனாலேயே வயதான ஆண்கள் இளம் வயதிலுள்ள பெண்களை அதிகளவில் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். மற்றொரு விஷயம் மூடநம்பிக்கை. பெண்களின் கன்னித்தன்மையை ஒப்பிட்டு பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே நிலவுகின்றன. இதனால் அதிகளவிலான பெண்கள் பாதிக்கப்படுவது சமூகத்தில் இன்றும் தொடரும் நிகழ்வுகளாக உள்ளது.

இதுவரை உடலுறவு கொள்ளாத ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கான மற்றொரு காரணம் பாலியல் நோய். ஏற்கனவே உடலுறவு கொண்ட ஒரு பெண்ணுக்கு பாலியல் பரவும் நோய் இருக்கலாம். ஆனால் கன்னிப்பெண்களிடம் எந்த நோய்க்கான பாதிப்பும் இருக்காது. அவர்களை பரிசோதனை செய்ய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. சில ஆண்கள்உடலுறவு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டியதில்லை என்கிற காரணத்தால் கன்னிப் பெண்களை விரும்புகின்றனர்.

click me!