இந்தியாவில் வெறும் 8,000 ரூபாய் பட்ஜெட்டில் Samsung Galaxy M04 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
பட்ஜெட் விலை முதல் பிரிமியம் வரையிலான ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனம் சாம்சங் ஆகும். அந்த வகையில் தற்போது வெறும் 8000 ரூபாய் பட்ஜெட்டில் அதாவது குறைந்த விலையில் சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனில் சாம்சங் அறிமுகம் செய்துள்ளது இந்த மாடல் Galaxy M04 ஆகும்.
கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனில் நீண்டகால அப்டேட் வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் விலையில் நீண்டகால அப்டேட் கிடைப்பது அரிதான ஒரு விஷயம். அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தற்போது, மிக நீண்டகாலத்திற்கு ஸ்மார்ட்போன் அப்டேட் தொடர்ந்து வழங்குவதாக கூறியுள்ளது.
undefined
சாம்சங்கின் புதிய பட்ஜெட் போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. சாம்சங் குறிப்பிட்டபடி நீண்டகால அப்டேட் வழங்கப்படும் என்றால் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் எச்டி பிளஸ் ரெசல்யூசன், 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கேமரா, 2 மெகாபிக்சல் கேமரா உள்ளன. இதே போல் முன் பக்கத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்ட ஒரு செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
அறிமுகமானது Realme 10 Pro, Realme 10 Pro Plus.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
பேட்டரியை பொறுத்த வரையில் 5000 எம் ஏ ஹச் சக்தி கொண்ட பேட்டரியும், அதற்கு ஏற்ப 15 வாட்ஸ் கொண்ட சார்ஜ் வரும் வழங்கப்படுகிறது. இந்த சார்ஜர் வெறும் 15 மட்டும் இருப்பதால் முழுமையான அடைவதற்கு சற்று நேரம் ஆகும்.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் ஜி 4 ஸ்மார்ட்போனின் விலை 8,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி கொண்ட வேறு என்று ஆகும். வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் நிறுவனத்திடமிருந்து பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எம் 04 ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். மொத்தம் 4 விதமான நிறங்களில் வருகிறது.