எலோன் மஸ்க் இப்போது கிட்டத்தட்ட 1.5 பில்லியன் கணக்குகளை ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக நீக்க திட்டமிட்டுள்ளார்.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும், பல்வேறு நிர்வாக மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக டுவிட்டர் தளத்தை ஸ்பேம், போட் போன்றவற்றில் அகற்ற விரும்பினார். அதற்கு முன்பு இருந்த டுவிட்டர் நிர்வாகம், ட்விட்டர் தளத்தில் இருந்த ஸ்பேம் கணக்குகளைப் பற்றிய சரியான தரவை வைத்திருக்கவில்லை. இதனால், அதை சரிசெய்யும் முயற்சியில் களம் இறங்கினார்.
இந்த நிலையில், தற்போது டுவிட்டர் கணக்குகளை நீக்குவது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், டுவிட்டர் தளத்தில் உள்ள மெமரி, அளவுக்கு அதிகமாக ஆக்கிரமித்துள்ள நினைவகத்தை கிளீன் செய்யும் வகையில், 1.5 பில்லியன் கணக்குகளை நீக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதனால் பலரும் தங்கள் டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு விடுமோ என்று கருதுகின்றனர்.
undefined
நீங்கள் ஒரு வழக்கமான ட்விட்டர் பயனராக இருந்தால், நீங்கள் அடிக்கடி ட்வீட் செய்பவராக இருந்தால், உங்கள் கணக்கு தடைபடாது. எனவே கவலைப்பட வேண்டாம். பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் கணக்குகள் அல்லது நீண்ட காலமாக லாகின் செய்யாமல் இருக்கும் மட்டுமே தளத்திலிருந்து நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது 2 வயது மகனுக்கும் டுவிட்டர் பேட்ஜ்! எலான் மஸ்க் அட்டகாசம்!
இதற்கு முன்பு எலான் மஸ்க் தனியாக ஒரு ட்வீட்டில் மெசேஜ் பாதுகாப்பு குறித்து பேசியிருந்தார். அதில், ‘சிக்னல், ஐமெசேஜ் போன்ற தளத்தைப் போலவே ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் நேரடியாக அனுப்பப்படும் மெசேஜ்களும் என்க்ரிப்ட் செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஒருவருக்கு நேரடியாக அனுப்பப்படும் மெசேஜ்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டால், அதை மற்றவர்கள், பாட்கள் பார்ப்பது சாத்தியமில்லை என்று கூறியிருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் வணிக கணக்குகளில் இருந்து பயனர்களுக்கு அனுப்பப்பட்ட நேரடி மெசேஜ்கள் பொதுவெளியில் சர்வசாதாரணமாக கண்டுபிடிக்கப்படும் வகையில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது, நேரடியாக ஒருவருக்கு அனுப்பப்படும் மெசேஜை, பொதுத்தளத்தில் மற்றவர்களால் அந்த மெசேஜை பார்க்க முடியும் என்றால், ஒருவரது தனியுரிமை, பாதுகாப்பு என்பதே நீர்த்துபோகிவிடும்.
டுவிட்டர் அலுவலகத்தில் அண்மையில் நடந்த மீட்டிங்கில், மேற்கண்ட சம்பவத்தை எலான் மஸ்க் குறிப்பிட்டு பேசினார். மேலும், டுவிட்டரில் பயனர்கள் எந்தவிதமான பயமுமின்றி தைரியமாக மெசேஜ் அனுப்ப வேணடும். மெசேஜ்கள் லீக் ஆகிவிடுமோ என்ற எண்ணமே பயனர்களுக்கு இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு டுவிட்டரை பலப்படுத்த வேண்டும் என்று ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அறிவுறுத்தினார்.