தனது 2 வயது மகனுக்கும் டுவிட்டர் பேட்ஜ்! எலான் மஸ்க் அட்டகாசம்!

By Dinesh TG  |  First Published Dec 9, 2022, 8:46 PM IST

எலான் மஸ்க்கின் 2 வயது மகனுக்கு டுவிட்டர் பேட்ஜ் வழங்கப்பட்டது. அந்த புகைப்படங்களை எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக எலான் மஸ்க் தான் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். . மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியூரான் சிப் பொருத்தும் தொழில்நுட்பம், ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டரில் நிர்வாக மாற்றங்கள் என ஆல் ரவுண்டர் சேஞ்சராக இருந்து வருகிறார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய  பிறகு, அனுதினமும் அவருடைய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும், எதிர் நடவடிக்கைகளும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், எலான் மஸ்க் தனது மகனுக்கும் டுவிட்டர் பேட்ஜ் போட்டுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. எலான் மஸ்க்கின் மகனுக்கு இரண்டு வயது ஆகிறது. அவரது பெயர் X Æ a-Xii ஆகும். அதாவது, X Ash A Twelve என்பது பெயரின் உச்சரிப்பு. டுவிட்டர் அலுவலகத்துக்கு எலான் மஸ்க் தனது குழந்தையோடு வந்துள்ளார். அப்போது, பணியாளர்களுக்கு வழங்கப்படும் பேட்ஜ் ஐடி கார்டு போல், குழந்தைக்கும் போட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

Telegram Update: சிம் கார்டு தேவையில்லை.. மொத்தமாக எல்லா வசதிகளையும் வாரி வழங்கிய டெலிகிராம்!

எலான் மஸ்க் தனது குழந்தையோடு இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அந்த குழந்தையின் கழுத்தில் பேட்ஜ் ஐடி கார்டு அணிவிக்கப்பட்டு இருந்தது. குழந்தையின் பெயர் எக்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எலான் மஸ்க் தனது எண்ணங்களையும், முயற்சிகளையும் குடும்பத்தில் இருந்தே தொடங்கியுள்ளார். 

 

And with his Twitter badge pic.twitter.com/4AzHMB1Poq

— Elon Musk (@elonmusk)

 

ஏற்கெனவே, எலான் மஸ்க் தனது நியூரான் சிப்பை மனித மூளையில் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஆரம்பமாக, தன்னையும், தனது மகனையுமே சோதனையில் ஆழ்த்த போவதாக தகவல்கள் வந்துள்ளன. அதுவும் அடுத்த 6 மாதத்திற்குள்ளாக இந்த சோதனை முடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டம் நடந்தது. அப்போது டுவிட்டரின் தலைமை அலுவலகத்தில் பல பணியாளர்கள், தங்கள் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வந்தனர். எலான் மஸ்க்கும் தனது குழந்தையை கூட்டிக்கொண்டு வந்தார்.

 

X in beautiful San Francisco pic.twitter.com/yM3LiGEpNL

— Elon Musk (@elonmusk)


அன்றைய தினம் டுவிட்டர் அலுவலகத்தில் இருந்த மீட்டிங் ரூமில், எந்த ஃபைல்கள், ஆவணங்களும் இல்லை. மாறாக முழுக்க முழுக்க விளையாட்டு பொம்மைகளால் நிறைந்து இருந்தது. அவை அனைத்தும் எலான் மஸ்கின் குழந்தை எக்ஸ் கொண்டு வந்திருந்தது தான். பொம்மைகள், கார்கள் அனைத்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அன்றைய தினம் மகிழ்ச்சி பொங்கி இருந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
 

 

click me!