ஆப்பிள் நிறுவனத்தைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, ப்ளூ டிக் சந்தா கட்டணத்தை எலான் மஸ்க் உயர்த்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கடந்த சில வாரங்களாகவே ஆப்பிள் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் சண்டை போய்க்கொண்டிருக்கிறது. எலான் மஸ்க்கின் டுவிட்டர் செயலிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு ஆப்பிள் நிறுவனம் முயற்சி செய்தது. அதற்கு ஏற்ப, எலான் மஸ்க்கும் ஆப்பிள் நிறுவனத்தை விட நல்லதொரு ஸ்மார்ட்போனை நானே கொண்டு வருவேன், சந்தைப்படுத்துவேன் என்பது போல் கூறி வருகிறார்.
இதனிடையே டுவிட்டரில் எலான் மஸ்க் அறிமுகம் செய்த கட்டணத்துடன் கூடிய ப்ளூ டிக் சந்தா நிறுத்தப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்கள் 8 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 660 ரூபாய்) செலுத்தி ப்ளூ டிக் சந்தாவை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தளத்தில் ப்ளூ டிக்கிற்கான சந்தாக் கட்டணம் 11 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 900 ரூபாய்) என்று உயர்த்தப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த வாரம் ஆப்பிள் நிறுவுனம் அதன் ஆப் ஸ்டோர் விலையில் பெரும் மாற்றங்களை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஆப் ஸ்டோர் பயனர்களுக்கு ட்விட்டர் ப்ளூவின் விலையை அதிகரிப்பதற்கான மஸ்க்கின் முடிவு வந்துள்ளது. அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் ஏற்ற இறக்கமான சூழலில் உள்ளது. இந்த சூழலுக்கு ஏற்ப சில கேம் மற்றும் ஆப் டெவலப்பர்கள், இந்த விலைகளை சரிசெய்யும் வகையில், மிகவும் வசதியான ஆப்ஷன்களை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
ப்ளூம்பெர்க் செய்தியின்படி, “ 2022ம்ஆண்டில் உலகில் உள்ள 500 கோடீஸ்வரர்கள் 1.40 லட்சம் கோடி டாலரை இழந்துள்ளனர். அதிலும் கடந்த 6 மாதங்களில்தான் அதிகமான இழப்பு நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்துள்ளார்.
எலான் மஸ்க் ஏறக்குறைய 400 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்துள்ளார் என்று பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடிக்கு வாங்கி ஒரு வாரத்துக்குள் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டிய நிலைக்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.