அறிமுகமானது Realme 10 Pro, Realme 10 Pro Plus.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

By Dinesh TGFirst Published Dec 9, 2022, 11:02 AM IST
Highlights

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் Realme 10 Pro, Realme 10 Pro Plus ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.

Realme இறுதியாக இந்தியாவில் Realme 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.. இந்த சீரிஸில் Realme 10 Pro மற்றும் Realme 10 Pro Plus ஆகியவை அடங்கும். வளைந்த டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் என்பது நடுத்தரமான பிரிவில், வளைந்த,பெசல் குறைவான டிஸ்ப்ளே கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். 

Realme 10 Pro Plus. Realme 10 Pro: விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

Realme 10 Pro Plus ஆனது 6GB மற்றும் 8GB என இரண்டு வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி+128ஜிபி வகையின் விலை ரூ.24,999. இருப்பினும், வங்கி சலுகைகளுடன், இதை ரூ.23,999 க்கு வாங்கலாம். 8GB+128GB வேரியண்ட் கொண்ட Realme 10 Pro Plus ஸ்மார்ட்போனை ரூ.25,999க்கு வாங்கலாம். ஹைப்பர்ஸ்பேஸ் கோல்டு, டார்க் மேட்டர் மற்றும் நெபுலா ப்ளூ என மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Realme 10 Pro ஆனது 6GB மற்றும் 8GB என இரண்டு வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி+128ஜிபி வகையின் விலை ரூ.18,999.  இருப்பினும், வங்கி சலுகைகளுடன், இதை ரூ.17,999 க்கு வாங்கலாம். 8GB+128GB வேரியண்ட் கொண்ட Realme 10 Pro ஸ்மார்ட்போனை ரூ.19,999க்கு வாங்கலாம். டார்க் மேட்டர் மற்றும் நெபுலா ப்ளூ வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Realme 10 Pro Plus ஸ்மார்ட்போனானது டிசம்பர் 14 அன்று விற்பனைக்கு வருகிறது.  அதேசமயம் Realme 10 Pro டிசம்பர் 16 முதல் Flipkart இல் கிடைக்கும்.

Redmi Note 12 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்! அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியீடு!!

Realme 10 Pro Plus சிறப்பம்சங்கள்:

  • டிஸப்ளே: Full HD+
  • அளவு: 6.7 இன்ச் அளவிலான அமோலெட் டிஸ்ப்ளே
  • டிஸப்ளே தன்மை: வளைந்த ரக பிரீமியம் டிஸ்ப்ளே
  • பிராசசர்: மீடியாடெக் டிமன்சிட்டி 1080 SoC 
  • ரேம்: 12GB ரேம் மற்றும் 256GB மெமரி
  • கேமரா: 108 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளிட்ட குவாட் கேமரா அமைப்பு. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

பிற அம்சங்கள்: மற்ற முக்கிய அம்சங்களில் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5G மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.

 

click me!