டெலிகிராம் செயலியில் சிம் இல்லாமலே பதிவு செய்தல், ஆட்டோ டெலிட் என பயனர்களுக்கு பயனுள்ள பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
வாட்ஸ்அப்பை விட எக்கச்சக்க அம்சங்கள் டெலிகிராம் செயலியில் உள்ளன. அதை இன்னொரு முறை நிரூபிக்கும் வகையில், தற்போது பல்வேறு அப்டேட்டுகளையும், வசதிகளையும் வாரி வழங்கியுள்ளது.
டெலிகிராமில் சிம் கார்டு இல்லாமல் பதிவு செய்யலாம்:
undefined
டெலிகிராம் பயனர்கள் தங்கள் ஃபோன் எண்ணை யார் பார்க்க வேண்டும், மொபைல் எண் மூலம் மற்றவர்கள் தங்களை கண்டுபிடிக்க வேண்டுமா என்ற ஆப்ஷன்கள் வந்துள்ளன. மேலும், பயனர்கள் சிம் கார்டு இல்லாமலே டெலிகிராமை இயக்க முடியும்.
அனைத்து சேட் மெசேஜ்களையும் ஆட்டோ டெலிட் செய்யலாம்:
டெலிகிராமில் இருந்து தனி நபர் மெசேஜ்கள், குரூப் மெசேஜ்கள் போன்றவற்றை தானாகவே டெலிட் ஆகும் வகையில் செட் செய்து கொள்ளலாம். இதற்கென ஆட்டோ டெலிட் டைமர் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 நாள், 1 வாரம், 1 மாதம் அல்லது நீங்கள் விரும்பிய குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மெசேஜ்களை ஆட்டோ டெலிட் செய்யலாம். இதற்கு Settings > Privacy & Security > Auto-Delete Messages என்ற மெனுவிற்குச் சென்று செட் செய்ய வேண்டும்.
டாப்பிக்ஸ் 2.0:
வாட்ஸ்அப்பில் கம்யூனிட்டி என்ற அம்சம் உள்ளது போல், டெலிகிராமில் டாப்பிக்ஸ் 2.0 என்ற பெயரில் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பேசுபொருள், தலைப்புகளில் பேசப்படும் கருத்துகளை தனியாக பிரித்தெடுத்து பார்க்கலாம். 100 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களின் நிர்வாகிகள் விவாதங்களை தலைப்புகளாக வைக்கலாம்.
ஸ்பேம் மெசேஜ்களை முடக்கலாம்:
தானியங்கி அல்காரிதம்கள் மூலம் அதிகமான ஸ்பேமை அகற்றும் வகையில் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. பெரிய குரூப்களில் நீங்கள் இருந்தால் Manage Group > Administrators என் ஃபில்ட்டர் பகுதிக்குச் சென்று தேவையில்லாதவற்றை முடக்கலாம்.
தற்காலிக QR குறியீடுகள்
உங்களிடம் பயனர் பெயர் இல்லையென்றால், உங்கள் ஃபோன் எண்ணை அனைவரிடமிருந்தும் மறைத்து வைக்க விரும்பினால், இப்போது தற்காலிக QR குறியீட்டை உருவாக்கலாம். குறியீட்டை ஸ்கேன் செய்பவர்கள் உங்கள் ஃபோன் எண் தெரியாமலேயே உங்களைத் சேர்க்க முடியும்.
iOS இல் ஈமோஜி தேடல்
iOS தளத்தில் இருக்கும் டெலிகிராம் பயனர்கள் எமோஜிகளைத் தேடி பார்த்து உங்களுக்குப் பொருத்தமான எமோஜிகளை எடுக்க முடியும். இந்த அம்சம் ஏற்கெனவே ஆண்ட்ராய்டு தளத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
WhatsApp போட்டோஸ், வீடியோக்களை டெலிட் ஆகிவிட்டதா.. இப்படி செய்தால் திரும்பவும் பெறலாம்!
மெமரி மேனேஜ்மெண்ட்:
ஒவ்வொரு ‘சேட்’டும் எவ்வளவு மெமரி ஆக்கிரமித்துள்ளது என்பதை எளிமையாகப் பார்க்க முடியும். இதன் மூலம், அதிக மெமரி கொண்டுள்ள சேட்களை, வீடியோ, படங்களை தேவையில்லை எனில், அவற்றை டெலிட் செய்துகொள்ளலாம், ஃபில்டர் செய்துகொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் இப்போது சமீபத்திய டெலிகிராம் அப்டேட் மூலம் கிடைக்கின்றன, இது ஏற்கனவே உலகளவில் வெளிவரத் தொடங்கியுள்ளது. பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று டெலிகிராம் செயலியைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.