Google Chrome பிரவுசரில் குறைந்த விலையில் பொருட்களை ஆர்டர் செய்யும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் அம்சங்களும், இன்னும் பல வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கூகுள் நிறுவனத்தின் சொந்த முயற்சியால் டெவலப் செய்யப்பட்ட பிரவுசர் கூகுள் குரோம் ஆகும். ஒவ்வொரு நாளும் சுமார் 4 பில்லியன் டிவைஸ்களில் கூகுள் குரோம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பயனர்களுக்கு பாதுகாப்பான பிரவுசிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த நிலையில், கூகுள் குரோமில் தற்போது பயனர்களின் வசதிக்கு ஏற்ப சில அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது பணத்தையும் நேரத்தையும் சேமிக்கலாம்:
ஒரே நேரத்தில் பல ஆன்லைன் ஸ்டோர்களில் ஒரு பொருளின் விலையைக் டிராக் செய்யும் வகையில் ‘டிராக் பிரைஸ்’ என்ற அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் ஒரு பொருளின் விலை அமேசான், பிளிப்கார்ட் எதிலாவது விலை குறைந்தால் உடனே இமெயில் பெறுவீர்கள், எனவே உங்களுக்கு ஏற்ற விலையில் நீங்கள் வாங்கலாம்.
இதற்கு நீங்கள் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றவும்:
எப்போது வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் உங்கள் பிற பாஸ்வேர்டுகளைப் பார்க்கலாம்:
அட.. இவ்வளவு ஈஸியா Paytm வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றலாமா!
உங்கள் மொபைலில் பிரவுசிங் செய்யும் போது இணையதளங்கள், ஆப்ஸில் எளிதாக லாகின் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் ஏற்கெனவே சேமித்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தவலாம். இதற்கு Chrome செயலியைப் பதிவிறக்கி, லாகின் செய்து Sync செய்தாலே போதும்.