WhatsApp Update: இனி உங்களுக்கு பிடித்த அவதார்களை நீங்களே உருவாக்கி மெசேஜ் அனுப்பலாம்!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 10:47 AM IST

WhatsApp செயலியில் அவதார் எமோஜிகளை உருவாக்கி மெசேஜ் செய்வதற்கான வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அவதாரை உருவாக்கி, எப்படி அனுப்பவுது என்பது குறித்து முழுமையான விவரங்களை இங்குக் காணலாம். 


டெலகிராமுக்குப் போட்டியாக வாட்ஸ்அப் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு, அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது புதிதாக அவதார் எமோஜிகளை பயனர்களே உருவாக்கி, மெசேஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

பயனர்கள் தங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் சிறந்த முறையில் வெளிப்படுத்த அவதாரங்கள் உதவும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. ஒருவர் தங்கள் சொந்த அவதாரை உருவாக்கலாம், அல்லது வாட்ஸ்அப்பில் ஏற்கெனவே உள்ள 36 தனிப்பயன் ஸ்டிக்கர்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

Tap to resize

Latest Videos

மேலும் ஸ்டைல் ​​மேம்பாடுகளைச் சேர்க்க உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது. அதன்படி, அனிமேஷன், லைட்ஸ், நிழல், மேக் அப் இன்னும் பல தனிப்பயன் வசதிகள் உள்ளன. இந்த அவதார் அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே அனைத்து தளங்களிலும் வழங்கத் தொடங்கியுள்ளது, அதாவது வரும் நாட்களில் இந்த அம்சம் எல்லா பயனர்களுக்கும் கிடைக்கும்.

இதுதொடர்பாக வாட்ஸ்அப் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "நாங்கள் வாட்ஸ்அப்பில் அவதாரங்களைக் கொண்டு வருகிறோம்! இப்போது நீங்கள் மெசேஜ் செய்யும் போது உங்கள் அவதாரை ஸ்டிக்கராகப் பயன்படுத்தலாம். இன்னும் ஸ்டைல்கள் விரைவில் வரும்" என்று தெரிவித்துள்ளார்.

WhatsApp போட்டோஸ், வீடியோக்களை டெலிட் ஆகிவிட்டதா.. இப்படி செய்தால் திரும்பவும் பெறலாம்!

வாட்ஸ்அப்பில் அவதார்களை உருவாக்கி அனுப்புவது எப்படி?

ஒருவருக்கு அவதார் மெசேஜ் வந்துள்ளது என்றால், அதை வழக்கம் போல் கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம். மேலும், அந்த மெசேஜ் பகுதியிலேயே பல அவதார்கள் இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கென தனியாக செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, எதையும் மாற்றத் தேவையில்லை. அதே போல், அவதாரை மாற்ற வேண்டும் என்றால் கூட, அதன் அருகிலேயே அதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. அதை கிளிக் செய்து விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். சிகை அலங்காரங்கள், உடைகள் மற்றும் பிற விஷயங்களுடன் அவதாரைத் தனிப்பயனாக்க முடியும்.

வாட்ஸ்அப்பில் அவதாரை சுயவிவரப் படமாகப் பயன்படுத்த முடியுமா?

உங்கள் அவதாரை சுயவிவரப் படமாக அமைக்கும் ஆப்ஷனும் வாட்ஸ்அப்பில் உள்ளது Settings > Profile photo > Edit > Edit என்ற பகுதிக்குச் சென்று, அவதாரத்தைப் பயன்படுத்து என்பதை 

click me!