GPay, Amazon Pay என அனைத்திற்கும் UPI புதிய கட்டுப்பாடு!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 10:15 AM IST

மத்திய அரசின் NPCI நிறுவனம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் இனி கூகுள் பே, அமேசான் பே, வங்கி செயலிகள் என அனைத்து டிஜிட்டல் செயலிகளும் எத்தனை முறை பணம் அனுப்பலாம் பெறலாம், எவ்வளவு ரூபாய் அனுப்பலாம் / பெறலாம் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளன.


மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (National Payments Corporation of India, NPCI) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கெனவே சில பயனர்கள், குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் பணத்தை அனுப்பும் போது, அனுப்ப முடியவில்லை என்று கூறி வந்தனர். அந்த நிலை தற்போது அமலுக்கு வந்துள்ளது. 

அதன்படி, ஒரு நாளைக்கு UPI மூலம் குறைந்தபட்சம் 25 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே பணத்தை அனுப்ப முடியும். இந்த வரம்பமானது ஒவ்வொரு வங்கிகளுக்கும் ஏற்ப மாறுபடும். அதாவது, கனரா வங்கி, இந்தியன் வங்கிகளுக்கு அதிகபட்ச பணப்பரிமாற்ற அளவு 25 ஆயிரம் ரூபாய். HDFC, ICICI, எஸ்பிஐ போன்ற வங்கிகள் 1 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. 

Tap to resize

Latest Videos

இதேபோல் ஒரு நாளைக்கு 20 முறை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்றால் 24 மணி நேரத்திற்கு பிறகே செய்ய முடியும். இதற்கிடையில் எந்த பணப்பரிவர்த்தனை செய்தாலும், பணம் அனுப்பவோ, பெறவோ முடியாது. 

இவ்வாறு UPI தரப்பில் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், Google Pay, Amazon Pay, Paytm, Phonepe போன்ற செயலிகள், தங்களுக்கென ஒரு வரம்பை நிர்ணியித்துள்ளன. 

GPay Transaction Limit:

UPI வரம்பின் ஒரு நாளைக்கு 20 தடவை வரையில் பணப்பரிமாற்றம் செய்யலாம். ஆனால், கூகுள் பே செயலியில் ஒரு நாளைக்கு 10 முறை மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய முடியும், அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரையில் பணம் அனுப்ப முடியும் என்று வரம்பிடப்பட்டுள்ளது. 

மேலும், QR கோடு மூலமாக பணத்தை பெற வேண்டும் என்றால், அதற்கும் கூகுள் பே கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, ஒருவர் மற்றவரிடம் இருந்து பணம் பெறுவதற்கு கோரிக்கை விடுத்தால், 2000 ஆயிரத்திற்குள் இருந்தால் பணம் பெற முடியும். அதற்கு மேல் பணம் பெற முடியாது. 

Phonepe Transaction Limit:

Phonepe செயலியைப் பொறுத்தவரையில், ஒரு நாளைக்கு 10 முதல் 20 தடவை வரையில் பணப்பரிவரத்தனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பயனர்கள் எந்த வங்கியைச் சார்ந்து உள்ளார்களோ, சம்பந்தப்பட்ட வங்கியின் வரம்பு அப்படியே பொருந்தும் என்றும் தனியாக வரம்பிப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நிமிடத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கலாம்!

Paytm Transaction Limit:

பேடிஎம் செயலியில் சற்று வித்தியாசமாக ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு ரூபாய் அனுப்பலாம், ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் அனுப்பலாம் என்று பிரித்து வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு 5 தடவை பணப்பரிமாற்றம் செய்யலாம், 20 ஆயிரம் ரூபாய் அனுப்பலாம். ஒரு நாளைக்கு 20 முறை அனுப்பலாம், 1 லட்சம் ரூபாய் அனுப்பலாம். 

Amazon Pay Transaction Limit:

அமேசான் பே செயலியைப் பொறுத்தவரையில் புதிய பயனராக இருந்தால், முதல் நாளைக்கு 5000 ரூபாய் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். அதன்பிறகு, ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் அனுப்ப முடியும். பயனர்களின் வங்கிக்கு ஏற்ப பணப்பரிமாற்றம் எத்தனை தடவை செய்யலாம் என்ற வரம்புகள் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!