Xiaomi நிறுவனத்தின் துணை நிறுவனமான Redmi தற்போது இந்தியாவில் புதிய நோட் 12 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ரெட்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சாம்சங், ரியல்மிக்கு போட்டியாக ரெட்மியின் ஸ்மார்ட்போன்கள் இருந்து வருகின்றன. இதுவரையில் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தது. அடுத்ததாக 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் ஏற்கெனவே அறிமுகமான நிலையில், இந்தியாவுக்கு எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், Redmi Note 12 Series ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக Redmi அறிவித்துள்ளது.
இருப்பினும், ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிடவில்லை என்றாலும், போனிலுள்ள கேமரா பற்றி ஒரு டீஸ் செய்துள்ளது. அதன்படி, இது ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் இருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தொடரில் சீரிஸில் Note 12, Note 12 Pro மற்றும் Note 12 Pro+ உள்ளிட்ட மூன்று போன்கள் உள்ளன.
நோட் 12 சீரிஸ் வெளியீட்டை டீஸ் செய்து, ரெட்மி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது, “இந்த ஆண்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போனாக, வழக்கமான தரத்துடன் 12 மடங்கு பெரியதாகவும், வேகமாகவும், மிக அற்புதமானதாகவும் இருக்கும்’ என்று விளம்பரம் செய்து வருகிறது. மேலும், ‘Redmi Note 12 5G Series என்பது ஒரு நோட் மட்டுமல்ல, அது #SuperNote ஆகும்." என்று பெயரையும் கவர்ச்சிகரமாக மாற்றியுள்ளது.
OnePlus 11 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் லீக்!
Redmi Note 12 தொடர்: இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை
Redmi Note 12 Pro+ ஆனது 8GB RAM + 256GB மற்றும் 12GB RAM + 256GB உள்ளிட்ட இரண்டு வேரியண்ட் வகைகளில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை முறையே CNY 2,199 (தோராயமாக ரூ. 25,000) மற்றும் CNY 2,399 (தோராயமாக ரூ. 27,300) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Redmi Note 12 Pro+ ஆனது நீலம், வெள்ளை மற்றும் கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது.
Redmi Note 12 Pro ஆனது 6GB RAM + 128GB மெமரி வேரியண்டுடன் வருகிறது, இதன் விலை CNY 1699 (தோராயமாக ரூ. 19,300) ஆகும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை CNY 1,799 (தோராயமாக ரூ. 20,400), 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை CNY 1,999 (தோராயமாக ரூ. 22,700) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.