மிகஎளிய முறையைப் பயன்படுத்தி பேடிஎம் வாலட்டிலிருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றுவது எப்படி என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதற்கான படிப்படியான வழிமுறைகளை இங்கே காணலாம்.
Paytm பயனர்கள் தங்கள் Paytm வாலட்டில் இருந்து தங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது Paytm இல் இல்லாத பிற வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்ற முடியும். பணத்தை மாற்றும்போது கணக்கு விவரங்கள் எளிதாக இருக்க வேண்டும். கீழ்கண்ட முறையைப் பயன்படுத்தி பணத்தை எளிதில் மாற்றலாம்.
பேடிஎம்மை பொறுத்தவரையில், இப்போது UPI மூலம் பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். ஆனால்,எதிர்முனையில் உள்ளவர் UPI எண் வைத்திருக்க வேண்டும். இதனால், Paytm இல் பதிவு செய்யப்படாதவை உட்பட எந்த மொபைல் எண்ணிற்கும் அதிவேகமாக, தடையின்றி பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
undefined
ஒரே நிமிடத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கலாம்!
Paytm செயலியில் உள்ள பயனர்கள், யாருக்கு வேண்டுமானாலும், Paytm இல் பதிவு செய்யாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு UPI முறையில் பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.
பேடிஎம் மூலம் LPG எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தால், கேஷ்பேக் சலுகைகளைப் பெறலாம். புதிய பயனர்கள் "FIRSTGAS" குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.15 கேஷ்பேக் பெறலாம். அதனுடன் பயனர்கள் "WALLET50GAS" என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, Paytm Wallet மூலம் முன்பதிவு செய்தால் ரூ. 50 வரை கேஷ்பேக் பெறலாம்.
முன்னதாக, பேடிஎம், கூகுள் பே போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இதற்கு நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.