விவோ நிறுவனம் 5000mAh சக்தி கொண்ட பேட்டரி. 3ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்களுடன் பட்ஜெட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு நல்ல ஸ்மார்ட்போன் வந்துள்ளது. விவோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் பெயர் Vivo Y02 ஆகும். ஆர்க்கிட் புளூ மற்றும் காஸ்மிக் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. விவோவின் ஆன்லைன் ஸ்டோரிலும், ஒருசில ஆஃப்லைன் கடைகளிலும் வந்துள்ளன.
Vivo Y02 ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 8,999 ரூபாய். இந்த பட்ஜெட் விலையில் MediaTek Helio P22 பிராசசர், 3GB RAM, 32GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 Go, FunTouchOS 12 ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும், 720X1,600 பிக்சல், 20:9 விகிதம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6.51-இன்ச் HD+ IPS LCD டிஸப்ளே உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரையில், ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8 மெகாபிக்சலுடன் கூடிய ஒரே ஒரு கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. வழக்கம் போல், 5,000mAh பேட்டரி , USB 2.0 போர்ட், 10W சார்ஜர், டூயல் 4ஜி VoLTE, புளூடூத் 5.0, வைஃபை 5, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை உள்ளன.
Best 10 Mobiles in India: இந்தாண்டிற்கான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் இதுதான்!
Vivo Y02 சிறப்பம்சங்கள் சுருக்கம்: