OnePlus 11 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் லீக்!

By Dinesh TG  |  First Published Dec 6, 2022, 9:41 AM IST

OnePlus நிறுவனம் ஏற்கனவே OnePlus 11 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இப்போது முதல் முறையாக அதன் தோற்றம் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன.


கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் மவுசு தான். அந்த வகையில், அடுத்ததாக ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் வர உள்ளது. அதன் தயாரிப்பு பணிகள் நடந்துகொண்டிருக்கும் போதே, ஸ்மார்ட்போனின் டிசைன் குறித்த விவரங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கிளிப்பியுள்ளது. அதன்படி, வரவிருக்கும் OnePlus 11 ஃபிளாக்ஷிப் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 பிராசசருடன் வருகிறது. இது ஹவாயில் நடந்த Snapdragon உச்சிமாநாட்டின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

GadgetGang தளத்தில் OnePlus 11 ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் காட்டப்பட்டுள்ளது. அவை: பச்சை மற்றும் கருப்பு. அந்த தளத்தில் வெளிவந்துள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் 10 சீரிஸுடன் ஒப்பிடும்போது வடிவமைப்பு மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறது. OnePlus 11 பின்புற பேனலில் ஒரு பெரிய வட்ட வடிவ கேமரா கட்அவுட்டைக் கொண்டுள்ளது, இதில் மூன்று கேமராக்கள் எல்இடி ஃபிளாஷ் உள்ளன. அதைத் தொடர்ந்து OnePlus பிராண்ட் லோகோ உள்ளது.

Tap to resize

Latest Videos

ஃபோனில் மெட்டல் ஃப்ரேம் மற்றும் வளைந்த டிஸ்ப்ளே இருக்கும் வகையில் தெரிகிறது. முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக ஒற்றை கேமரா சென்சார் கொண்ட பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே போல் உள்ளது.

OnePlus 11 ஸ்மார்ட்போன் எப்போது வரும்?

ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 11 வருவதை உறுதிப்படுத்தியிருந்தாலும், இன்னும் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் இல்லை. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 செயலியுடன் வரும் முதல் போன்களில் ஒன்பிளஸ் 11 இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், சில இணையதளங்களில் OnePlus 11 இன் அறிமுகம் குறித்து தகவல்கள் வெளியிட்டுள்ளன.

அதன்படி,2023 இன் முதல் பாதியில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும். முதலில், ஸ்மார்ட்போன் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும். அதைத் தொடர்ந்து இந்தியா உட்பட பிற நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. OnePlus தரப்பில் OnePlus 11 வெளியீட்டு விவரங்களை இப்போது ஒரு மாதத்தில் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

Redmi Note 11 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு!

OnePlus 11 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் 11 இன் அனைத்து முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. சமீபத்தில் கசிந்த விவரங்களின்படி, வரவிருக்கும் OnePlus ஃபிளாக்ஷிப் ஃபோன் 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வரும்.

இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கலாம். கூடுதல் மெமரிக்கு மெமரிகார்டு வசதி இருக்கலாம். ஆண்ட்ராய்டு 13 அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 உடன் ஸ்மார்ட்போன் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

OnePlus 11 போனின் பின்பக்கத்தில் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 50 மெகாபிக்சல் சோனி IMX890 பிரைமரி சென்சார் என மூன்று கேமரா அமைப்பு இருக்கலாம். இதேபோல் முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32 மெகாபிக்சல் கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!